30 வகையான பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள் | Snake names in Tamil with pictures | 30 பாம்பு வகைகள் பெயர் படங்களுடன்.

இந்த உலகில் ஏறக்குறைய 3000 வகையான பாம்பு வகைகள் உள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் 280 வகையான பாம்புகள் உள்ளன. பல்வேறு வகையான பாம்பு பெயர்கள் மற்றும் படங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

தமிழகத்தில் நம்மை சூந்துள்ள 4 வகைப் பாம்புகள் (Big Four Snakes of India) மட்டும் தான் மனித உயிரை போக்கும் அளவிற்கு விஷத்தன்மை கொண்டவை. அவை கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், நல்லபாம்பு, மற்றும் சுருட்டை விரியன். மற்ற பாம்புகள் விஷமற்றது!

பெரும்பான்மையான கடற்பாம்புகள் அதிக விஷத்தன்மை உடையவை. இவற்றின் விஷம் நல்ல பாம்பை விட 4-10 மடங்கு அதிகம்.

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

30 பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இங்கே 30 வகையான பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது (Snake names in tamil with pictures). இது தமிழகத்தில் உள்ள (பொதுவாக நாம் காணும்) பாம்பு வகைகள் மட்டுமே.

1. இராஜ நாகம் (King Cobra)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இது கருநாகம் என்றும் சில பகுதிகளில் அழைக்கப்படுகிறது. பொதுவாக அடர்ந்த வனப்பகுதிகளில் மட்டுமே வாழும் இவ்வகை பாம்புகள், நீர் நிறைந்த பகுதிகளில் தான் வசிக்கும். மற்ற பாம்புகளை உணவாக உண்கின்றன.

பொதுவாக இராஜ நாகம் 12 முதல் 13 அடி நீளம் வரை வளரும். இதன் விஷம் மிக கொடியது. ஒரே கடியில் ஒருவரை கொள்ளும் திறன் படைத்தது. இராஜ நாகம் ஒருவரை கடித்தால், அவரால் 25% மட்டுமே உயிர் பிழைக்க முடியும்.

2. கொம்பேறிமூக்கன் (Common Bronzeback or Daudin’s Bronzeback)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இதுவும் ஒரு நச்சற்ற பாம்பு வகை தான். இது விலரணை பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது மரத்தில் (மரப் பொந்துகளில்) வாழும் பாம்பு வகை. ஒரு மர உச்சியில் இருந்து மற்றொரு மரத்திற்கு தாவக்கூடியது.

மரத்தில் வாழும் சிறு உயிரினங்கள், ஒணான், பறவைகள் போன்றவற்றை பிடித்து உணவாகக் உண்ணும்.

தான் கடித்து உயிரிழந்தவர்களை, சுடுகாட்டில் எரிப்பதை இப்பாம்பு மரத்தில் ஏறி பார்க்கும் என ஒரு கதையும் தமிழ் நாட்டில் உள்ளது. ஆனால் இது உண்மையல்ல.

3. கண் குத்திப் பாம்பு/ பச்சைப் பாம்பு

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

(Slender Green Tree Snake or Sri Lankan green vine snake or Long-Nosed Whip Snake)
இது ஒரு ஆபத்தில்லாத பாம்பு வகை. பகலில் வேட்டையாடும் இந்த பாம்புகளை பொதுவாக மரங்களில் காணலாம்.

தலையை மட்டும் நன்றாக உயர்த்தி நிற்கும் இந்த பாம்பை பார்த்து கண் குத்திப் பாம்பு என மக்கள் அழைப்பதுண்டு. ஆனால், இது ஆபத்தில்லாத பாம்பு. ஆனால், லேசான விஷம் உள்ளதால், கடிபட்டவர்க்கு 2-3 நாட்கள் வீக்கம் இருக்கும்.

4. இந்திய முட்டைதின்னிப் பாம்பு (Indian Egg-Eating Snake)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இந்திய பாம்புகளிலேயே மிகவும் அரிதாக காணப்படுவது, முட்டை உண்ணும் பாம்பாகும் or இந்திய முட்டைதின்னிப் பாம்பு. இது வங்காளம் மற்றும் பீகாரில் அதிகமாக காணப்படுகிறது.

5. பறக்கும் பாம்பு (Golden Tree Snake, Flying Snakes)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இது ஒரு ஒரு நஞ்சில்லா பாம்பு ஆகும். இது தங்க மரப் பாம்பு எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் காணப்படும் இது தமிழ் நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.

இப்பாம்புகள் தன் இரையை பிடிக்க, அல்லது பிற விலங்குகளிடம் இருந்து தன்னை காக்க, ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரம் தாவும். அதிகமாக இவ்வகை பாம்புகள் 100 மீட்டர் வரை தாவும். எனவே இதற்கு பறக்கும் பாம்பு என பெயர்.

நன்றாக மரம் ஏறும் இவ்வகை பாம்புகள், தென்னை போன்ற செங்குத்தான மரத்தில்கூட வேகமாக ஏறும். இது பல்லிகள், ஓணான், வெளவால்கள், பறவை முட்டைகள், மற்றும் சிறு பூச்சிகளை உணவாக உண்ணும்.

6. நாகப்பாம்பு (Naja/Cobras)

பாம்பு வகைகள் பெயர்

நாக பாம்புகள் (நல்ல பாம்பு) என்பது ஒரு பேரினம். இதில் பல வகையான பாம்புகள் உள்ளன. காட்டு நாகம், சமர் நாகம், எகிப்திய நாகம், கருங்கழுத்து நாகம், சீன நாகம், அரேபிய நாகம் என பல வகைகள் உண்டு.

இதில் நம் நாட்டில் காணப்படுவது இந்திய நாகம் (Naja naja) மற்றும் ராஜநாகம் ஆகும். நாக பாம்புகள் பொதுவாக தங்கள் எதிரியை தாக்க தயாராகும் போது படமெடுக்கும்.

இவைகள் தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகின்றன. நல்ல பாம்பின் விஷம் மிகவும் கொடியது. அது நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி, இரையை செயல் இழக்க வைக்கும்.

7. கட்டுவிரியன் (Common Krait)

பாம்பு வகைகள் பெயர்

பொதுவாக காடுகளில் வசிக்கும் இந்த பாம்பு, பனை விரியன், எட்டடி விரியன், எண்ணெய் விரியன் என்றும் அழைக்கப்படுகிறது.

நம் ஊர்களில் வயல்களிலும், மண், குப்பை கூளங்களுக்கிடையிலும், எலி வளை, கரையான் புற்று, மற்றும் கற்குவியல் போன்ற இடங்களிலும் காணப்படும்.

சராசரியாக 1 மீட்டர் நீளம் மட்டுமே வளரும் இந்த வகை பாம்புகள், கருநீலத்திலிருந்து நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். இதுவும் ஒரு மிக கொடிய நச்சுபாம்பு ஆகும்.

இந்த விரியன் பாம்புகள் கடிபட்டு பிழைப்பது கடினம். எனவே தான்

விதி முடிந்தவனைத்தான் விரியன் கடிக்கும்” என்பார்கள்.

8. கண்ணாடி விரியன் (Russell’s Viper)

பாம்பு வகைகள் பெயர்

பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் கொண்ட இந்த வகை பாம்புகள் அதிக நச்சுள்ளது. தடிமனான உடலையும், முக்கோண-வடிவ தலையையும் வைத்து இந்த பாம்பினங்களை நாம் அடையாளம் காண முடியும்.

இந்தப் பாம்பின் விஷம் ரத்தத்தை சிதைக்கும். இந்த பாம்பு கடித்தால், ஆறு மணி நேரத்தில் உயிரிழக்க நேரிடும். இந்தியா முழுவதும் இந்த பாம்பு நிறைந்துள்ளது.

9. சுருட்டைவிரியன் (Saw-Scaled Viper)

பாம்பு வகைகள் பெயர்

இந்த நச்சுப்பாம்பு குறட்டைப் பாம்பு, செதில் விரியன் மற்றும் குழிவற்ற விரியன் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பாம்பின் தலையும் முக்கோண வடிவில் இருக்கும். ஆனால் அதில் அம்பு வடிவில் வெள்ளைக்குறியும் காணப்படும். 38-60 cm அளவு மட்டுமே வளரும் இந்தவகை பாம்புகளின் நஞ்சு, ரத்த சிகப்பணுக்கள் அழிக்கும் வீரியம் கொண்டது.

காலையில் குளிர்காய்ந்து, இரவில் வேட்டையாடும் இந்த பாம்பு மணல்/பாறைப் பள்ளங்கள், மர பட்டைகள், காய்ந்த வேலிகள் மற்றும் முட்செடிகளின் அடியில் பொதுவாக காணப்படும்.

10. புல்விரியன் (Bamboo Pit Viper, Indian Green Pit Viper)

பாம்பு வகைகள் பெயர்

புல்விரியன் ஒரு நஞ்சுள்ள விரியன் வகை பாம்பு வகையாகும். தென்னிந்தியாவில் காணப்படும் இந்த வகை பாம்புகள் பச்சை நிறத்தில் இருக்கும். இதையும் கண் குத்திப் பாம்பையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

இவ்வகை பாம்புகள் தமிழ் நாட்டில் பரவலாக காணப்படுகின்றன. மூங்கில் தோப்புகள் மற்றும் காடுகளில், நீரோடைகளுக்கு அருகில் காணப்படுகிறது. இது 2.5 அடி நீளம் வரை வளரும்.

11. இராச மலைப்பாம்பு/ ரீகல் மலைப்பாம்பு

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இந்தியாவிலேயே(ஏன் உலகிலேயே) மிக நீளமான பாம்பு, ரீகல் மலைப்பாம்பு (Reticulated Python) தான். இதன் நீளம் சுமார் 28 அடி.

12. இந்திய மலைப் பாம்பு (Indian Python)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இந்திய மலைப்பாம்புகள் தெற்காசியா முழுவதும் காணப்படுகின்றன. பொதுவாக மிக பருமனான உடல் அமைப்பை கொண்டது. இவை நச்சு இல்லாத பாம்பு வகையை சார்ந்தது.

இது சுமார் 8-10 அடிவரை வளரும். இந்த வகை பாம்புகள் மந்தமாக இருக்கும், மற்ற பாம்புகளை போல வளைந்து நெளிந்து செல்லாமல், நேராக நகரும் திறன் கொண்டது. இவை தண்ணீருக்கு அடியிலும் நீச்சலடிக்கும்.

13. காலியான்குட்டி (Buff Striped Keelback)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இது ஒரு நச்சற்ற பாம்பினம். புல்லுருவி என்றும் அழைக்கப்படுகிறது. மலைகள் மற்றும் நீர் நிலைகளின் அருகில் வசிக்கும் இந்த பாம்பு, மிகவும் மெல்லியதாக இருக்கும். இது பார்ப்பதற்கு நீர் பாம்பு, புல் பாம்பு ஆகியவற்றை போல் இருக்கும்.

14. மண் மலைப்பாம்பு (Russell’s Boa or Rough-Scaled Sand Boa)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இந்த பாம்பு வகையை அயகரம் என்றும், மணியன் என்றும் கூறுவர். இது பார்ப்பதற்கு விரியன் வகை பாம்புகளை போல இருக்கும்.

ஆனால் இது நச்சு அற்றது. பொதுவாக 50 cm வரை வளரும் இவ்வகை பாம்புகளை, இந்தியா முழுதும் பார்க்கலாம்.

15. மலபார் குழி விரியன் (Malabar Pit Viper)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இது மேற்குத் தொடர்ச்சி மலைகளை பூர்வீகமாக கொண்ட ஒருவகை விரியன் பாம்பு வகை. இந்த பாம்புகள் லேசான விஷ தன்மை கொண்டது. இது கடித்தால், சில நாட்கள் வீக்கமும் வலியும் இருக்கும்.

மழைக்காலங்களில் பொதுவாக இவைகளை பார்க்கமுடியும். நீரோடைகளுக்கு அருகில் உள்ள பாறைகள் அல்லது மரங்களில் வசிக்கும்.

16. கண்டங்கண்டை நீர்க்கோலி/ஆசிய தண்ணீர் பாம்பு 

பாம்பு வகைகள் பெயர்

இது ஒரு நச்சற்ற தண்ணீர் பாம்பு வகையை சார்ந்தது. ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களின் அருகில் வசிக்கும். (Checkered keelback/Asiatic water snake)

17. பச்சை தண்ணீர் பாம்பு/கோரைப்பாம்பு 

பாம்பு வகைகள் பெயர்

இதுவும் ஒரு தண்ணீர் பாம்பு வகையை சார்ந்தது. நீர்நிலைகளை ஒட்டி வாழும் இது அங்கு கிடைக்கும் சிறு உயிரினங்களை உணவாக உண்ணும். (split keelback or olive keelback wart snake)

18. இந்திய ஓநாய் பாம்பு (Indian wolf snake)

பாம்பு வகைகள் பெயர்

இதற்கு சாதாரண வெள்ளிக்கோல் வரையன் எனும் பெயரும் உண்டு. இப்பாம்புகள் தெற்கு ஆசியா, மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுதும் காணப்படுகின்றன.

இது பார்ப்பதற்கு கட்டுவிரியன் பாம்பு போல இருக்கும். இந்த பாம்பு வகைக்குப் பிடித்த உணவு அரணைகள். மேலும் பல்லிகள், தவளைகள், ஓணான் போன்ற சிறு உயிரினங்களையும் உண்டு வாழும்.

19. ஓலைப்பாம்பு (Streaked Kukri Snake/ Russell’s Kukri)

பாம்பு வகைகள் பெயர்

இது கூட்டமாக வாழக்கூடிய ஒருவகை பாம்பு வகையாகும். இது ஆசிய முழுதும் உள்ளது.

இப்பாம்பைப் பற்றிய சொலவடையாக நம் ஊரில் சொல்லப்படுவது “ஒரு பாம்பை அடித்தால் ஒன்பது பாம்பு வரும்” என்பது. அதற்கு காரணம் இவ்வகை பாம்புகள் கூட்டமாக வாழ்வதால் தான்.

20. ஓடுகாலிப்பாம்பு (Banded Racer)

பாம்பு வகைகள் பெயர்

இது ஒரு நஞ்சில்லாத பாம்பு வகையாகும். இது 3.5 அடி நீளம் வரை வளரும். இது இந்தியா முழுவதும் பரவியுள்ளது. ஆனால் தமிழ் நாடு, காஷ்மீர் மற்றும் வட வங்காளத்தில் மட்டும் இவை காணப்படுவது இல்லை.

21. பச்சைநாகம் / பச்சை நீர்க்கோலி (green keelback or lead keelback)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இது ஒரு நச்சற்ற தண்ணீர் பாம்பு வகையை சார்ந்தது. தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும்.

இவ்வகை பாம்புகள், தமிழ் நாட்டின் ஆனைமலை பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த பாம்புகள் பச்சை நிறத்தில் இருக்கும், இரண்டு அடி நீளம் வரை வளரும்.

22. சாரைப்பாம்பு (Indian Rat Snake)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

சாரைப்பாம்பு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் காணப்படுகின்றது. தமிழ் நாட்டில் அனைத்து இடங்களிலும் பரவலாக இந்த பாம்பை காணலாம்.

பொதுவாக இந்த பாம்பு 6 அடி வரை இருக்கும். இதன் கடி அதிகமாக வலித்தாலும், நஞ்சு இல்லாதது. இது வேகமாக நகரும், நன்றாக மரம் ஏறும். எலி வளைகளிலும், கரையான் புற்றுகளிலும் அதிகமாக தங்கும்.

எலிகள், தேரைகள், ஓணான்கள், சிறு பாம்புகள், தவளைகள், பறவைகள், வௌவால்கள் என அனைத்தையும் உண்ணும்.

23. கடற்பாம்பு (Sea snake)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

கடற்பாம்புகள் அனைத்தும் நச்சு தன்மை கொண்டவை. இவ்வகை பாம்புகள் குட்டி ஈனும். தன் வாழ்நாள் முழுவதும் கடலிலேயே கழிக்கும். நீரில் நீந்த அதன் வால் பகுதி பரிணாம மாற்றம் அடைந்து துடுப்பு போல இருக்கும்.

இவை பொதுவாக வெதுவெதுப்பான கரையோரக் கடல் நீரில் (குறிப்பாக இந்தியப் பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல்) காணப்படுகின்றன.

24. நாய்த் தலையன்(South Asian Bockadam or dog-faced water snake)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இந்த வகை பாம்பு வகைகள் தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் கடலோர பகுதிகளை பூர்வீகமாக கொண்டவை. சதுப்பு நிலக்காடுகள், நீரோடைகள், ஏரிகள், குளங்கள், மற்றும் கழிமுகங்களின் அருகில் வாழக்கூடியவை.

இது விஷமற்ற பாம்பு. இதன் தலை நாயை போன்று இருப்பதால், இதற்கு நாய்த் தலையன் என்று பெயர். இது அலையாத்தி மரங்களில் (Mangroove trees) ஏறக் கூடியது.

25. சாதாரண குருட்டு பாம்பு (Blind Snake)

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள்

இந்தியாவிலேயே (ஏன் உலகிலேயே) மிக சிறிய பாம்பு, சாதாரணகுருட்டு பாம்பு (Common worm or Blind snake). இதன் நீளம் சுமார் 7 அங்குலம்.

இதை பொதுவாக புழுப்பாம்பு, செவிட்டு பாம்பு அல்லது சிறுபாம்பு எனவும் கூறுவதுண்டு.

26. நீலகிரி பொந்து பாம்பு (Nilgiri Burrowing Snake)

பாம்பு வகைகள் பெயர்

இந்தவகை பாம்புகள் இந்தியாவில் (குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில்) மட்டுமே காணப்படுகிறது. மிகச்சிறிய பாம்பு வகையான இது முற்றிலும் விஷமற்றது. இது 44 செமீ வரை மட்டுமே வளரக்கூடியது. இப்பாம்புகள் பார்ப்பதற்கு புழுப்பாம்பு போல இருக்கும்.

27. இருதலை மணியன் (Indian sand boa)

பாம்பு வகைகள் பெயர்

இது பொதுவாக சிவப்பு உழவன் பாம்பு, மண்ணுளி பாம்பு அல்லது இருதலை பாம்பு என அழைக்கப்படுகிறது. இது பொதுவாக 2 அடி நீளம் வரை வளரும். இந்த பாம்புகள் மிகவும் பயந்த, கூச்சம் நிறந்தவை. பொதுவாக யாரையும் கடிக்காது.

28. மோதிர வளையன் (Trinket Snake)

பாம்பு வகைகள் பெயர்

இதற்கு வக்கணத்தி என வேறொரு பெயரும் உண்டு. நச்சில்லாத இந்த பாம்பு வகைகள் பொதுவாக 4.5 அடி வரை வளரும்.

29. எண்ணெய்ப் பனையன்(Banded Kukri Snake)

பாம்பு வகைகள் பெயர்

இந்த பாம்பு நச்சு அற்றது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் அதிகமாக காணப்படும். இதன் நீளம் 24 அங்குலம் வரை இருக்கும்.

30. மதுரை வாலாட்டிப்பாம்பு

பாம்பு வகைகள் பெயர்

இந்தபாம்பு வகையை பழநி கரும்பழுப்பு முள்ளிவாலிப் பாம்பு, மற்றும் திருவிதாங்கூர் மலை முள்ளிவாலிப்பாம்பு என்றும் சொல்வதுண்டு. (Madurai shieldtail/Palni purple-brown worm thorntail snake/Travancore Hills thorntail snake)

இந்த பாம்பு நச்சு இல்லாதது. இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் தென்பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. இவை 30 cm வரை வளரும். இவை தரையின் மேல் பகுதியில் செல்லாமல், மண்ணின் மேற்பரப்பில் குழிபறித்துச் நகரும்.

பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள் | Snake names in Tamil with pictures | 30 பாம்பு வகைகள் பெயர் படங்களுடன்.

இந்த பதிவில் பாம்பு பெயர்கள் மற்றும் படங்கள் பற்றி தெளிவாக பார்த்தோம் | Snake names in Tamil with pictures | 30 பாம்பு வகைகள் பெயர் படங்களுடன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top