காடுகளின் பயன்கள் 10 Points – Kadukalin Payangal in Tamil

காடுகளின் பயன்கள் 10 points | Kadukalin Payangal in Tamil | 10 points benefits and uses of Forest. காடுகளின் பயன்கள் மற்றும் சிறப்புகள்

காடுகள் எண்ணற்ற பயன்களை நமக்கும் இந்த பூமியில் வாழும் பிற உயிர்களுக்கும் வழங்கி வருகிறது.

காடுகளின் பயன்கள் என்ன?
காடுகளின் பயன்கள் என எடுத்து கொண்டால், புவிவெப்பமயமாவத்தை தடுக்கிறது, மழை தருகிறது, மண் அரிப்பை தடுக்கிறது, நமக்கு உணவு வழங்குகிறது, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது, காற்று மாசுபாட்டைக் குறைக்கின்றது, பழங்குடிகளை காக்கிறது, உணவு சங்கிலியை பாதுகாக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சரி! இந்த பதிவில், நாம் விரிவாக 10 முக்கியமான காடுகளின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.

காடுகளின் பயன்கள் 10 Points

காடுகளின் பயன்கள் 10 points

இங்கே நான் காடுகளின் பயன்களை 10 points ஆக தொகுத்துள்ளேன். (காடுகளின் பயன்கள் 10 points | Kadukalin Payangal in Tamil)

1. காடுகள் நமக்கு மழை தருகிறது

கடல்களுக்குப் பிறகு, காடுகள் தான் மழைப்பொழிவின் முக்கிய ஆதாரம்.

தாவரங்கள் மற்றும் மரங்கள் அசைவதால் ஏற்படும் குளிர்காற்று, நீர் கொண்ட கருமேகங்களுடன் இரசாயன வினை ஆற்றுகிறது. இந்த செயலால் நமக்கு மழை கிடைக்கிறது!

இதன்மூலம் அதிக மழை தருவதில் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

2. காடுகள் காற்று மாசுபாட்டைக் குறைக்கின்றன

காடுகள் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயு (CO2), நீர், சூரிய ஒளி மற்றும் ஒரு சிறிய அளவு மண்ணின் கூறுகளிலிருந்து தங்கள் சொந்த உணவை உருவாக்குகின்றன.

அதாவது நாம் வெளிவிடும் கரியமில வாயுவை எடுத்து கொண்டு நமக்கு உயிர் மூச்சான பிராணவாயுவை வெளியிடுகின்றன. இதன் மூலம், காற்றுமாசு குறைகிறது. நாம் உயிர் வாழ தேவையான பிராணவாயுவும் நமக்கு கிடைக்கிறது.

சராசரியாக, காட்டின் ஒரு ஏக்கர் பரப்பளவு மட்டுமே, ஒரு நாளைக்கு 18 பேருக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.

3. காடுகள் 8 கோடி மக்களுக்கு உணவை வழங்குகின்றன

8 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக காடுகளை நம்பியுள்ளனர்.

  • உலகளவில், 100 கோடி மக்கள் இறைச்சி, பூச்சிகள், தாவரங்கள், காளான்கள் மற்றும் மீன்கள் உள்ளிட்ட காட்டு உணவுகளை நம்பியுள்ளனர்.
  • வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் போன்ற காடு சார்ந்த நடவடிக்கைகள் வளரும் நாடுகளில் 20% வீட்டு புரத தேவைகளை வழங்குகின்றன.
  • பழங்கள், காய்கறிகள் மற்றும் காளான்கள் போன்ற மரமற்ற வனப் பொருட்கள் கிராமப்புறங்களில், குறிப்பாக ஏழை வீடுகள் அல்லது உணவுப் பற்றாக்குறை காலங்களில் உணவின் முக்கிய கூறுகளாகும்.
  • உலகெங்கிலும் உள்ள சுமார் 200 கோடி மக்கள் காடுகளில் இருந்து கிடைக்கும் எரிபொருள், நிலக்கரி மற்றும் பாரம்பரிய மருந்துகளை நம்பியுள்ளனர்.
  • காடுகள் உண்ணக்கூடிய தாவரங்களை வழங்குதலுடன் நீர் ஆதாரங்களையும் பாதுகாக்கின்றன.

4. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது

பருவநிலை மாற்றம் தொடர்வதால், கோடையில் அதிக வெப்பநிலையும், மழை காலத்தில் மிகக் குறைந்த மழைப்பொழிவும் இருக்கும். இதன்மூலம் வறட்சி ஏற்பட பருவநிலை மாற்றம் வழிவகுக்கும்.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தவறினால், கடல் மட்டம் உயர்ந்து பல கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும்.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் காடுகளும் மரங்களும் நமக்கு உதவுகின்றன.

அவை பைங்குடில் வளிக்களை (Green house gases – நீராவி, காபனீரொக்சைட்டு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு) உறிஞ்சி, நீர் ஓட்டங்களை ஒழுங்குபடுத்துகின்றன மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றிலிருந்து கடலோர மக்களை பாதுகாக்கின்றன.

5. பூமியின் பல்லுயிரியலில் 80% காடுகள் வழங்குகின்றன

சுற்றுச்சூழலின் சமநிலைக்கு பல்லுயிர் முக்கியமானது. இது ஆக்ஸிஜன் வழங்கல், சுத்தமான காற்று மற்றும் நீர், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, பூச்சி கட்டுப்பாடு, கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளுக்கு இடையே சமநிலையை வழங்குகிறது.

பல்லுயிர் பெருக்கத்தில், ஒவ்வொரு உயிரினமும் சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகின் 80% விலங்குகள், தாவரங்கள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் காடுகளில் உள்ளன.

அவற்றில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தாவரங்கள், முக்கால்வாசி பறவைகள், 80% நீர்வீழ்ச்சிகள் மற்றும் 68% பாலூட்டிகள் ஆகியவை அடங்கும்.

6. காடுகள் புவி வெப்பமயமாவதை கட்டுப்படுத்துகிறது

புவி வெப்பயமயமாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது கரியமில வாயு!

கரியமில வாயு (CO2) மற்றும் பிற ஆபத்தான வாயுக்களை உறிஞ்சி, வளிமண்டலத்தில் பிராணவாயுவை (ஆக்ஸிஜனை) நிரப்ப காடுகள் உதவுகிறது. இதன்மூலம் புவிவெப்பமயமாவது கட்டுப்படுத்தப்படுகிறது!

வெப்பமண்டல காடுகள் ஒவ்வொரு ஆண்டும் 140 கோடி டன்கள் அளவு CO2 ஐ உறிஞ்சுவதாக NASA மதிப்பிடுகிறது.

7. காடுகள் மண்ணை வளமாக்குகின்றன

காடுகள் மண் நுண்ணுயிரிகளின் தாயகமாகும்! அவை பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகளுடன் சேர்ந்து, மண்ணின் தரத்தை செழுமைப்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

8. காடுகள் நமக்கு தண்ணீரை தருகின்றன

காடுகள் இயற்கை நீர்ஆதாரம்! காடுகள் தூய்மையான தண்ணீரை வழங்குகின்றன. பழங்குடி மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் தான்.

உலகின் பல நகரங்களுக்கும் காடுகளில் இருந்து வரும் தண்ணீரே மூலதனம். மக்களின் தண்ணீர் தேவையை காடுகளே பூர்த்திசெய்கின்றன.

9. காடுகள் நீரைச் சேமிக்கின்றன மற்றும் மண் அரிப்பைக் குறைக்கின்றன

காடுகள், அவற்றின் இலைக் குப்பைகளிலிருந்து மண்ணின் மேற்பரப்பில் கரிமப் பொருட்களை உருவாக்குகின்றன. அவற்றின் வேர்கள் மண்ணின் ஊடுருவலை அதிகரிக்கின்றன.

இதன் விளைவாக:

  • மண் அரிப்பு தடுக்கப்படுகிறது
  • நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கிறது
  • ஓடைகளின் வண்டல் மண் குறைதல் தடுக்கப்படுகிறது

10. அழிந்து வரும் வன விலங்குகளை காடுகள் பாதுகாக்கிறது

நம்முடைய வாழ்வியல் தேவைகளுக்காக நாம் அதிகளவு காடுகளை அழிக்கிறோம். நகரமயமாக்கல், காடுகளை அழித்தல் போன்றவற்றால் விலங்குகளின் வாழ்விடம் பறிபோனது.

வனவிலங்குகள் காடுகளை மட்டுமே நம்பி வாழ்கின்றன. காடுகள் மனிதர்களிடமிருந்து, அந்த விலங்குகளை பாதுகாக்கிறது. இதன் மூலம் உணவு சங்கிலி பாதுகாக்கப்பட்டு, சுற்றுசூழலை சமநிலையில் வைத்திருக்க உதவுவது

உணவு சங்கிலி பாதிக்கப்பட்டால், பல வகையான விலங்குகள் மற்றும் உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிடும்.

Bonus Tip: 11. காடுகள் தொழில் துறைக்கு உதவுகிறது

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மரபொருட்கள் எல்லாமே காட்டில் இருந்து பெற்றவை தான். உதாரணமாக மேசை, நாற்காலி, ஜன்னல், கதவுகள், தீப்பெட்டி, காகிதம், பென்சில், என சொல்லிக்கொண்டே போகலாம்.

காகிதம், ரப்பர், மரச்சாமான்கள், தீக்குச்சி, விளையாட்டுக் பொருட்கள், பஞ்சு (இலவம் மரம்), மரப்பொம்மைகள், எண்ணெய்கள் (வேம்பு, புங்கம் மற்றும் இலுப்பை), வாசனை பொருட்கள் (சந்தன மரம்), தைலம் (தைலமரம்) போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தங்கள் மூலப்பொருட்களுக்குக் காடுகளையே நம்பியுள்ளன.

Bonus Tip: 12. காடுகள் பழங்குடியின மக்களை பாதுகாக்கிறது

இன்றும் கூட பல பழங்குடி மக்கள் காட்டில் தான் வசிக்கிறார்கள். காடு ஒன்றே அவர்களின் உயிர் ஆதாரம். பழங்குடியின மக்களை காடு பாதுகாக்கிறது.

அவர்களுக்கு உணவு, தண்ணீர், வீடு வழங்கி அவர்கள் இனம் அழியாமல் இருக்க உதவுகிறது. காடு இல்லையெனில் அந்த மக்களின் வழக்கை கேள்விக்குறியே!

காடுகளின் பயன்கள் 10 points | Kadukalin Payangal in Tamil | 10 Points Benefits and uses of Forest. காடுகளின் பயன்கள் மற்றும் சிறப்புகள்.

மேலும் படிக்க:

காடுகளின் எண்ணற்ற பயன்களை நமக்கும் இந்த பூமியில் வாழும் பிற உயிர்களுக்கும் வழங்கி வருகிறது.

காடுகளின் பயன்கள் என்ன? இந்த பதிவில், நாம் மேலே 10 முக்கியமான காடுகளின் பயன்கள் பற்றி பார்த்தோம். காடுகளின் பயன்கள் மற்றும் சிறப்புகள் | காடுகளின் பயன்கள் 10 points | Kadukalin Payangal in Tamil | 10 Points Benefits and uses of Forest.

Resources

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top