டிராகன் பழம் தீமைகள்: அடிக்கடி சாப்பிட்டால் வரும் தீமைகள்

டிராகன் பழம் தீமைகள்: என்னதான் அதிகமான நன்மைகள் இருந்தாலும், டிராகன் பழத்தில் சில தீமைகளும் உள்ளன.

பொதுவாக டிராகன் பழத்தை உண்பது பாதுகாப்பானது, இருப்பினும் அதிகமாக உண்பது சிலருக்கு ஒவ்வாமை (அல்ர்ஜி), வயிற்றுப் பிரச்சினைகள், போன்ற பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

டிராகன் பழம் தீமைகள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

டிராகன் பழம் தீமைகள்

டிராகன் பழம் தீமைகள்

தனித்துவமான தோற்றம் மற்றும் சுவையால், டிராகன் பழத்தை அனைவருக்கும் பிடிக்கும். இதில் சொல்லப்பட்டுள்ள டிராகன் பழம் தீமைகள், அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே! டிராகன் பழத்தை அளவாக சாப்பிட்டால், எந்த தீமையும் ஏற்படாது.

வயிற்றுப் பிரச்சினைகள்

டிராகன் பழத்தை சாப்பிடுவது நம் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் உங்களுடைய செரிமான அமைப்பை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

டிராகன் பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் இயற்கையான டையூரிடிக் (diuretics) ஆக செயல்படுகின்றன, அதாவது அவை நம் உடலில் இருந்து மலம் சீராக வெளியேற உதவுகின்றன.

நார்ச்சத்துகள் நமது செரிமான ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தந்தாலும், டிராகன் பழத்தை மிதமாக உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், அதிகப்படியான நார்ச்சத்து உட்க்கொண்டால், குடல் வாயு, குடல் அடைப்பு, வயிற்றுப்போக்கு, வயிற்று அசௌகரியம் மற்றும் வாய்வு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் வரலாம்.

ஒவ்வாமை (அல்ர்ஜி)

சிலருக்கு டிராகன் பழம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். உங்களுக்கு டிராகன் பழத்தை சாப்பிட்டவுடன் அலர்ஜி ஏற்பட்டால், அதனை உண்பதை தவிர்க்க வேண்டும்.

அல்ர்ஜி அறிகுறிகள்:

உதடுகள் மற்றும் நாக்கு வீக்கம், தொண்டை அரிப்பு, தொண்டையில் எரியும் உணர்வு போன்ற ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

குறைந்த இரத்த அழுத்தம்

டிராகன் பழம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, இரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும். அனால் அதற்காக திகமாக சாப்பிடக்கூடாது.

அதிகமாக, டிராகன் பாகம் சாப்பிட்டால், உடலில் பொட்டாசியம் அதிகரிக்கும், இது ஹைபோடென்ஷனுக்கு (hypotension) வழிவகுக்கும்.

இரத்த அழுத்தம் இயல்பான அளவை விட குறையும் போது ஹைபோடென்ஷன் (குறைந்த இரத்த அழுத்தம்) ஏற்படுகிறது.

இது தலைச்சுற்றல், குமட்டல், சோர்வு, மனச்சோர்வு மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

உங்களுக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக டிராகன் பழத்தை சாப்பிட கூடாது.

சிறுநீர் சிவப்பு நிறத்துடன் வெளியேறுதல்

டிராகன் பழத்தை நீங்கள் போதுமான அளவு உட்கொண்டால் உங்கள் சிறுநீர் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறும்.

அதிகப்படியாக நீங்கள் டிராகன் பலன்களை சாப்பிட்டால், இந்த அறிகுறி தீவிரமடையும். இது உடல்நலனுக்கு ஆபத்தானது.

நீங்கள் டிராகன் பழம் சாப்பிடுவதை நிறுத்தினால், இரண்டு நாட்களில், உங்கள் சிறுநீர் அதன் வழக்கமான நிறத்திற்குத் மாறிவிடும்.

தண்ணீரை அதிகமாக குடித்தாலும், இந்த பிரச்சனை சரியாகிவிடும்.

அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

டிராகன் பழத்தில் வைட்டமின் சி போன்ற பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (anti oxidants) உள்ளன. அவை உங்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும்.

இருப்பினும், அதிகப்படியான டிராகன் பழங்களைச் சாப்பிடுவதால், பீட்டா-கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உங்கள் உடலில் இருக்கும். இது நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

அதிகமாக வைட்டமின் ஈ உட்கொள்வதால, ரத்தக்கசிவு பக்கவாதம் ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது.

டிராகன் பழம் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா?

கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது மருந்து அளவுகளில் டிராகன் பழம் பாதுகாப்பானதா என்பதை அறிய போதுமான நம்பகமான தகவல்கள் இல்லை. எனவே கர்ப்பிணி பெண்கள் டிராகன் பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

நீரிழிவு நோய்

டிராகன் பழம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். நீங்கள் டிராகன் பழத்தை எடுத்துக் கொண்டால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை உன்னிப்பாகக் கண்காணிக்கவும்.

அறுவை சிகிச்சை

திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்கு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பு டிராகன் பழத்தை உட்கொள்வதை நிறுத்துங்கள். ஏனெனில், இரத்த சர்க்கரை அளவை மாற்றும் திறன் இந்த பழத்திற்கு உள்ளது.

தனித்துவமான தோற்றம் மற்றும் சுவையால், டிராகன் பழத்தை அனைவருக்கும் பிடிக்கும். இதில் சொல்லப்பட்டுள்ள டிராகன் பழம் தீமைகள், அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே! டிராகன் பழத்தை அளவாக சாப்பிட்டால், எந்த தீமையும் ஏற்படாது.

டிராகன் பழம் தீமைகள் பற்றி பார்த்தோம். இந்த தீமைகள் தினமும் பல டிராகன் பழங்களை சாப்பிட்டால் தான் வரும். பொதுவாக டிராகன் பழம் உங்கள் உடலுக்கு நன்மைகளையே தரும். அதனால், டிராகன் பழம் தீமைகள் பற்றி கவலை படாமல், நன்றாக சாப்பிடுங்கள்.

References

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top