சிறியாநங்கை உண்ணும் முறை (மூலிகை மருத்துவ பயன்கள்)

சிறியாநங்கை உண்ணும் முறை பற்றி பார்ப்பதற்கு முன் அதன் மகத்துவத்தை பற்றி பார்ப்போம்.

மஞ்சள்காமாலை, மலேரியா, கல்லீரல் நோய்கள், சைனஸ், பாம்புக்கடி போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் சிரியாநங்கைக்கு உள்ளது.

தினசரி காலையில் சிறியாநங்கை பொடியை சாப்பிடுவதால் சர்க்கரைநோய் மற்றும் அலர்ஜி நோய்கள் தீரும்.

ஜெனன சாகரம்” என்னும் நூலில் போகர் எழுதியிருக்கும் பாடல் ஒன்று சிரியாநங்கையின் மகிமையை உணர்த்தும்,

நாமென்ற சிரியாநங்கை வேரைத்தின்றால் நல்லதொரு விஷமெல்லாம் நாடாதோடும், வாமென்ற சடைச்சி வேரரைத்துத்தின்ன வல்லதொரு விஷங்களெல்லாம் வாங்கும் வாங்கும்

இந்த பாடலின் பொருள், சிறியா நங்கை வேரை சாப்பிட்டாலும், சடைச்சி வேரை அரைத்துத் தின்றாலும், சீந்தில் தண்டின் பாலை அருந்தினாலும் விஷங்கள் நீங்கும் என்பதாகும்.

சிறியாநங்கை உண்ணும் முறை

சிறியாநங்கை செடி எப்படி இருக்கும்

சிறியாநங்கை ஒரு குறுஞ்செடி. செம்மண் மற்றும்  கரிசல் மண்களில் நன்றாக வளரும்.

தமிழ்நாடு கேரளா பகுதியில் அதிகமாக விளையும் செடியாகும். இதன் இலை, வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாமல் இருக்கும்.

பயன் தரும்பாகங்கள்:

இலை மற்றும் வேர்ப் பகுதிகள்.

சர்க்கரை நோய்க்கு சிறியாநங்கை உண்ணும் முறை

சிறியாநங்கை இலை சர்க்கரை நோய்க்கு சிறந்த மூலிகையாக கருதபடுகின்றது. சிரியா நங்கை இலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

தேவையான மூலிகைகள்

  • சிறியாநங்கை இலை பொடி.
  • சிறுகுறிஞ்சான் இலை பொடி.
  • காய்ந்த நெல்லிக்காய் பொடி.
  • வெந்தைய பொடி.

சிறியாநங்கை உண்ணும் முறை

இவற்றையெல்லாம் (மேலே குறிப்பிட்டுள்ள மூலிகைகள்) சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஐந்து கிராம் பொடி கலந்து தினமும் காலை மாலை இருவேளையும் குடிக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு மாதம் குடித்து வந்தால் சர்க்கரைநோய் விரைவில் குணமாகும்.

விஷக்கடிக்கு மருந்து

சிறியாநங்கை பற்றி ஒரு பொன் மொழி,

பாம்பை விரட்டும் சிறியாநங்கை” என்பது.

சிறியாநங்கை பாம்புக்கடி, தேள்கடி, வண்டுக்கடி போன்ற விஷக்கடிக்கு சிறந்த மருந்து.

கீரிக்கும் பாம்புக்கும் சண்டை வந்து, கீரி பாம்பை கொன்ற பின் சிறியாநங்கை செடியின் மீது புரண்டு எழும். அப்படி எழும்போது பாம்புக்கடியால் ஏற்பட்ட புண்கள் ஆறும்.

விஷகடிகளுக்கு சிறியாநங்கை உண்ணும் முறை

பாம்பு, தேள், மற்றும் விஷ வண்டுகள் கடித்தால் சிறியாநங்கை இலையை அம்மியில் அரைத்து சிறு சிறு உருண்டையாக்கி விழுங்க வேண்டும். அப்போது விஷத்தன்மை நீங்கும்.

வீட்டில் சிறியாநங்கை செடியினை வளர்த்து வந்தால் பாம்புகள் வராது. சிரியாநங்கையின் மீது பட்டு வரும் காற்று பாம்பின் மீது படும் போது பாம்பின் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்புகள் ஓட முடியாமல் நின்று விடும்.

வீக்கம் தீர

சிறியாநங்கை இலையை எலுமிச்சை சாறுடன் சேர்த்து மைய அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் பற்று போட்டால் வீக்கம் குறைந்து விடும்.

தேமல் பிரச்சினைக்கு

தேமல் பிரச்னைக்கு சிறியாநங்கை உண்ணும்முறை.

சிறியாநங்கை வேரை அருகம்புல் வேருடன் சேர்த்து மைபோல் அரைத்து காலை மாலை என இரு வேலையும் சாப்பிட்டு வந்தால் தேமல் பிரச்சனை தீரும்.

சிறியாநங்கை மருந்து சாப்பிடும் போது கத்திரிக்காய் உணவில் சேர்க்க கூடாது.

வயிற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்க

மனித உடலில் உள்ள சத்துக்களை குடற்புழுக்கள் உறிஞ்சி கொள்ளுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். இதனால் நோய் தொற்று வர வாய்ப்பாக இருக்கிறது.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சிறியாநங்கை இலையை ஒரு கை பிடி அளவு போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

பிறகு வடிகட்டி காலை நேரத்தில் குடித்து வந்தால் குடற்புழுக்கள் அழிந்து விடும் உடல் பலம்பெறும்.

 மேலும் தகவல்:

  • சிறியாநங்கை இலையை மைய அரைத்து சிறு அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் வலுவடையும்.
  • சிறியாநங்கையிலை பொடியுடன் அதே அளவு இனிப்பு சேர்த்து காலை மாலை இரண்டு நேரமும் சாப்பிட்டால் உடல் அழகு பெறும்.
  • சிறியாநங்கை இலை சாறு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் குணமாக பயன்படுகின்றது. இரத்தத்தை சுத்திகரிக்கவும் பயன்படுகின்றது.
  • சிறியாநங்கை இலைச்சாறு புகை, மது அருந்துபவர்கள் கல்லீரலில் சேரும் கழிவினை சுத்தப்படுத்துகின்றது.
  • சிறியாநங்கை இலைச்சாறு பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் நீர்கட்டிகள், பூச்சிகள், கொப்பளங்கள் தீரவும், வராமல் தடுக்கவும் பயன்படுகின்றது.

கூடுதல் தகவல்

சித்த மருத்துவரின் ஆலோசனையை கேட்டு சிறியாநங்கையின் சாற்றை நாம் மருந்தாக பயன்படுத்தி கொள்வது நல்லது.

சிறியாநங்கை உண்ணும் முறை பற்றி பார்த்தோம். இந்த உன்னத மூலிகையை நீங்களும் உண்டு அதன் முழு பயனை பெற வாழ்த்துக்கள்.

இந்த சிறியாநங்கை உண்ணும் முறையில் நீங்கள் உங்களுக்கு ஏற்றவாறு சில மாறுதல்களை செய்யலாம். ஆனால் அதிகமாக இந்த மூலிகையை உட்கொள்ள வேண்டாம். சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று நீங்கள் அதிகமாக உண்ணலாம்.

References

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top