வால்நட் (அ) அக்ரூட் பருப்பு சாப்பிடும் முறை

அக்ரூட் பருப்பு சாப்பிடும் முறை: அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளுக்கு அக்ரூட் பருப்புகளை நீங்கள் சாப்பிடுலாம்.

அக்ரூட் பருப்பு (வால்நட்ஸ்/Walnuts) நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாட்டை அதிகரிப்பதில் பிரபலமானது. அக்ரூட் பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் இரும்பு ஆகியவற்றில் நிறைந்துள்ளன.

நம் அன்றாட உணவில் அக்ரூட் பருப்பை சேர்த்து கொள்வதால் சூப்பர் ஆரோக்கியம்  கூடுதலாக கிடைக்கிறது.

வால்நட்ஸ்களை சரியான முறையில் சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இந்த பதிவில், சரியான முறையில் அக்ரூட் பருப்பு சாப்பிடும் முறை, அவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதற்கான எளிதான வழிகள் பற்றியும் பார்ப்போம்.

அக்ரூட் பருப்பு சாப்பிடும் முறை

வால்நட் / அக்ரூட் பருப்பு சாப்பிடும் முறை

அக்ரூட் பருப்பு சாப்பிடும் முறை (வால்நட் சாப்பிடும் முறை), மற்றும் சில எளிய வழிகளை பார்க்கலாம்.

உங்கள் உணவில் எந்த வடிவத்திலும் இந்த சூப்பர் ஆரோக்கியமான பருப்பை சேர்த்துக்கொள்வது, ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அக்ரூட் பருப்பை சாப்பிடுவதற்கான சிறந்த வழி இங்கே.

1. ஊறவைத்த அக்ரூட் பருப்பு

  • அக்ரூட் பருப்பை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அவற்றை சாப்பிடுவது சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதைச் செய்ய, 4-5 அக்ரூட் பருப்பை  எடுத்து ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் சாப்பிடலாம் .
  • ஊறவைத்த அக்ரூட் பருப்பை சாப்பிடுவதால்  உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
  • சாதாரண அக்ரூட் பருப்புடன் ஒப்பிடும்போது ஊறவைத்த அக்ரூட் பருப்பு  ஜீரணிக்க எளிதானவை. ஊறவைத்த அக்ரூட் பருப்பில் இருந்து ஊட்டச்சத்துக்களை உங்கள் உடல்எளிதில் எடுத்து கொள்கிறது.

ஊறவைத்த அக்ரூட் பருப்பை உங்கள் உணவில் சேர்க்க சில வழிகள்:

அக்ரூட் பருப்பை இரவில் ஊறவைத்து, காலையில் முதலில் சாப்பிடுங்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது  2 அக்ரூட் பருப்புகள் சாப்பிடுங்கள்.

  • உங்கள் படுக்கைக்கு அருகில் ஊறவைத்த அக்ரூட் பருப்புகளை ஒரு கிண்ணத்தில் வைத்து தூங்கும் முன்னும் சாப்பிடலாம்.
  • உங்கள் காலை சிற்றுண்டியில் ஊறவைத்த வால்நட்ஸை சேர்க்கலாம்.
  • நீங்கள் உலர்ந்த பழங்கள், ஊறவைத்த அக்ரூட் பருப்பு, மற்றும்  ஊறவைத்த  உலர்ந்த பழங்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து அதை வேலைக்குசெல்லும் போது எடுத்துச் செல்லலாம். இது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி ஆகும்.
  • உங்கள் ஓட்ஸ் அல்லது சாலட்களில் அக்ரூட் பருப்புகளை சேர்க்கலாம்.

அக்ரூட் பருப்பை  உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதால் அதன் அனைத்து அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் நாம் பெறலாம்.

2. வால்நட்ஸ் மிட்டாய்

அக்ரூட் பருப்பு சாப்பிடும் முறை

சிறிது அக்ரூட் பருப்புகள், கொக்கோ பவுடர் மற்றும் தேன் எடுத்துக் கொள்ளவும். தேன் மற்றும் கோகோவுடன் ஒட்டும் பேஸ்ட்டை உருவாக்கி, அதனுடன் அக்ரூட் பருப்புகள் சேர்த்து காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

இந்த வால்நட் மிட்டாய்கள் உணவுக்கு இடையில் பசி எடுக்கும் போது ஒரு சிறந்த சிற்றுண்டியாக சேர்த்து கொள்ளலாம்.

3. வால்நட் சட்னி/ டிப்

வால்நட் சாப்பிடும் முறை

  • சில வறுத்த அக்ரூட் பருப்புகள்
  • பூண்டு
  • எலுமிச்சை சாறு
  • எண்ணெய்
  • மிளகு சிறிது உப்பு

செய்முறை

சில வறுத்த அக்ரூட் பருப்புகள், பூண்டு, எலுமிச்சை சாறு, எண்ணெய், மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்து ஒன்றாக அரைத்து வீட்டில் வால்நட் டிப் செய்யலாம்.

உங்கள் உணவில் அக்ரூட் பருப்பை எவ்வாறு சேர்த்து கொள்ளலாம்  என்பதை பாப்போம்.

  • சாண்ட்விச்சில் சில அக்ரூட் பருப்புகளை வறுத்து சேர்க்கலாம்.
  • அக்ரூட் பருப்பை  அலங்கரிக்க பயன்படுத்தலாம்
  • அக்ரூட் பருப்புகளை வறுத்து, அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். உங்கள் சாலடுகள் மற்றும் இனிப்புகளை அலங்கரிக்க அவற்றைப் பயன்படுத்தலாம்.

உடை எடையை குறைக்க அக்ரூட் பருப்பு சாப்பிடும் முறை?

  • அக்ரூட் பருப்பை சாப்பிட சிறந்த நேரம் காலை அல்லது இரவு வேளைகள். அக்ரூட் பருப்பை தினமும் காலை இரவு என இரு வேளையும் உணவுக்கு முன் சாப்பிடலாம்.
  • ஒரு வேளைக்கு 7-8 அக்ரூட் பருப்பை மென்று சாப்பிடலாம். பிறகு, 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

இப்போது உங்கள் வயிறு நிரம்பியது போல் இருக்கும். இந்த உணர்வு உங்களின் பசியை போக்கி அதிகமாக உண்வு உண்பதை கட்டுப்படுத்தும். இதன் மூலம் உடல் எடையும் குறையும்.

நீங்கள் ஏதேனும் மருந்து/சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

இந்த பதிவில், சரியான முறையில் அக்ரூட் பருப்பு சாப்பிடும் முறை, அவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதற்கான எளிதான வழிகள் பற்றியும் பார்த்தோம். அக்ரூட் பருப்பு சாப்பிடும் முறை: அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளுக்கு அக்ரூட் பருப்புகளை (வால்நட் சாப்பிடும் முறை) நீங்கள் சாப்பிடுலாம்.

Reference:

அக்ரூட் பருப்பு சாப்பிடும் முறை: அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளுக்கு அக்ரூட் பருப்புகளை (வால்நட் சாப்பிடும் முறை) நீங்கள் சாப்பிடுலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top