ஜூஸ் குடிச்சா இவ்ளோ நல்லதா? 7 சுவையான பழச்சாறுகள்

கோடைக்காலம் அதிக வெப்பநிலையைக் கொண்டு இருக்கும். இந்த கடுமையான வெப்பத்தில் குளிர்ச்சியாக இருப்பதற்கும் நல்ல ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் பழச்சாறுகள் மிக அவசியமானவை.

அதிகப்படியான வியர்வை உடலில் அதிக அளவில் தண்ணீரை இழக்கச் செய்கிறது. அந்த நீர்ச்சத்தை அடைய தண்ணீர் இன்றிமையாதது. ஆனால், நீங்கள் அதற்காக தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டிய அவசியமில்லை. மிகவும் சுவையான பழச்சாறுகளை தண்ணீருக்கு மாற்றாக பருகலாம்.

juice recipe tamil

1. முலாம்பழ சாறு

கோடை காலத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது, முலாம்பழ ஜூஸ் ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுவையான சாறு.

முலாம்பழத்தில் ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன. மேலும் வைட்டமின் சி, கால்சியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தேவையான பொருட்கள்

  • முலாம்பழம் துண்டுகள் – 1 கப்
  • சர்க்கரை – 5 தேக்கரண்டி
  • ஐஸ் கட்டிகள் – 3

செய்முறை

  • வெளிப்புற தோலை உரித்து, முலாம்பழத்தின் விதைகளை வெளியே எடுக்கவும்.
  • தேவையான அளவு ஐஸ் கட்டி சேர்க்கவும். ஐஸ் கட்டி இல்லை என்றால், குளிர்ந்த நீர் சேர்க்கலாம்.
  • சர்க்கரை, முலாம்பழம், மற்றும் ஐஸ் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
  • சுவையான முலாம்பழ ஜூஸ் தயார்.

2. தர்பூசணி சாறு

தர்பூசணி சிறந்த கோடை பழங்களில் ஒன்றாகும், மேலும் அதன் சாறு இன்னும் சிறந்தது. இது மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது, மேலும் உடலை குளிர்ச்சியாகவும்  புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.

கோடைக்கால பழமான  தர்பூசணி  சுவையானது மட்டுமல்ல, நம் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த பழம். தர்பூசணி சாற்றை நாம் தினமும் அருந்தலாம். தர்ப்பூசணி ஜூஸ் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

  • 1 கப் தர்பூசணி (விதைகள் நீக்கியது)
  • நாட்டு சர்க்கரை அல்லது தேன்

செய்முறை

  • அனைத்து பொருட்களையும் மிக்சியில் அரைத்து வடி கட்டவும்.
  • எளிதான சுவையான தர்பூசணி ஜூஸ் தயார்

3. எலுமிச்சைப்பழம்

நம் அனைவருக்கும் தெரிந்த, எலுமிச்சை பழத்தில் சிட்ரஸ் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

கோடை காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும். ஊட்டச்சத்துக்ககள் இந்த பழத்தில் அதிக அளவில் உள்ளது. மேலும், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும்.

குறிப்பாக கோடை  காலத்தில் தினமும் எலுமிச்சை சாறு அருந்துவது உடல் நலத்திற்கு நல்லது.

வைட்டமின் சி சேதமடைந்த செல்களை மீட்டெடுக்கவும், சுருக்கங்கள்ம ற்றும் பிற தோல் பிரச்சினைகளை தீர்க்கவும் எலுமிச்சை பழம் உதவுகிறது.

4. நன்னாரி சர்பத்

பழங்காலத்திலிருந்தே நன்னாரி வேர் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நன்னாரிவேர் மிகவும் பயனுள்ள இயற்கையான குளிர்ச்சியூட்டும் தன்மையுள்ள அற்புத மூலிகை ஆகும்.

நன்னாரிவேர் நிச்சயமாக வெப்ப தாக்கத்தின் மோசமான விளைவுகளிருந்து நம்மை காக்கின்றது.

நன்னாரி ஜூஸ் நம் உடலை புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்க செய்யும். கோடை காலத்தில் நன்னாரி ஜூஸ் அருந்துவது நம் உடலுக்கு ஆரோக்கியமானது.

5. கருப்பு திராட்சை சாறு

கருப்பு திராட்சை பழ சாறு, சக்கரைநோய் அபாயத்தைத் தடுப்பதுடன் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கருப்பு திராட்சை பழ சாறு  ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். பார்வையை மேம்படுத்தவும் உதவுகின்றது.

பொதுவாக கருப்பு திராட்சை மது தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.  திராட்சையில் பூச்சிக்கொல்லிகள் அதிகம் இருக்கும். எனவே, திராட்சை  சாறு தயாரிக்கத் தொடங்கும் முன், அவற்றை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

திராட்சை ஜூஸ் செய்வது எப்படி?

  • சில கருப்பு திராட்சையைகளை ஒரு மிக்ஸியில் எடுத்து கொள்ளுங்கள்.
  • அவை மென்மையாகும் வரை நன்றாக அரைக்கவும். பிறகு  வடிகட்டியைப் பயன்படுத்தி வடிகட்டவும்.
  • ஜூஸ் மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். அதனுடன்  இனிப்பு சுவைக்கு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.

6. நெல்லிக்காய்  சாறு

நெல்லிக்காயின் ஆரோக்கியமான  நன்மைகளைப் பற்றி மிக நீண்ட காலமாக தமிழர்கள் அறிந்து உள்ளனர்.

நெல்லிக்காய் ஆயுர்வேத பண்புகளைக் கொண்டு உள்ளது. நெல்லிக்காயில்  வைட்டமின் சி நிறைந்துள்ளது.

நெல்லி  சாற்றில் உள்ள வைட்டமின் சி  முடி உதிர்வை தடுக்கின்றது, சருமபொலிவை தருகின்றது, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

நெல்லிக்காய் ஜூஸ்  செய்வது எப்படி?

  • நெல்லிக்காயை மிக்ஸியில் ½ கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • பிறகு நன்றாக வடிகட்டவும்.
  • இப்போது ​​சர்க்கரை, தேன், ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
  • ஆரோக்கியமான நெல்லிக்காய் ஜூஸ் தயார்.

7. ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு பழ சாறு ஆரோக்கியமான பழச்சாறுகளில் ஒன்றாகும். ஏனெனில் நமது  உடல் நலத்திற்கு  பலவிதமான நன்மைகளை தருகின்றது.

மேலும், ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து உட்கொள்வதால்  ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நாம் பெறலாம்.

எப்படி செய்வது:

ஆரஞ்சு ஜூஸ் செய்வது மிகவும் எளிது.

  • ஆரஞ்சு பழங்களை நன்றாக கழுவி தோலை உரிக்கவும்.
  • ஆரஞ்சு பழத்தை இரண்டு பகுதிகளாக வெட்டி முட்கரண்டி உதவியுடன் விதைகளை நீக்கி விடவும்.
  • இப்போது, ​​வெட்டிய ஆரஞ்சுப் பழங்களை மிக்ஸி அல்லது பிளெண்டரில் ½ கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • வடிகட்டியைப் பயன்படுத்தி வடிகட்டவும்.
  • பிறகு நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.
  • ஆரஞ்சு சாறு ஆரோக்கிய நன்மைகளை தரும் அருமையான பழச்சாறு.

நாம் வீட்டில் பல வகையான  பழச்சாறு தயாரிப்பது ஆரோக்கியமாக இருக்க பல எளிய வழிகளில் ஒன்றாகும்.

கூடுதல் தகவல்

உங்களுக்கு பிடித்த பழங்கள்  தேர்வு செய்து எந்த நேரத்திலும் ஜூஸ் போடலாம். குழந்தைகளுக்கும் கொடுத்து நீங்களும் அருந்தலாம். இப்பொழுது  நீங்கள்  ஜூஸ் தயாரிக்க ரெடியா?

உங்களுக்கு வேறு ஏதேனும் சமையல் அல்லது பழச்சாறு நன்மைகள் தெரியுமா? கீழே உள்ள கருத்துகளில் அவற்றை எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top