பெண் பற்றிய பொன்மொழிகள் – 30 பொன் மொழிகள்

பெண் பற்றிய பொன்மொழிகள்! Quotes and Mottoes about Women!

பெண் என்பவள் சக்தியின் அம்சம். இந்த உலகின் இயக்கத்திற்கு தேவையான அனைத்து சக்தியையும் அளிக்கும் வல்லமை படைத்தவளாக பெண் இருக்கின்றாள்.

சொல்லப்போனால், இவ்வுலகில் நாம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அதிசய சக்தியே பெண்கள்! மகளிர் தினம் கொண்டாட உள்ள இந்த வேளையில் “பெண் பற்றிய பொன்மொழிகள்” பற்றி தெரிந்துகொள்வோம்.

பெண்களே! நீங்கள் வாழ்க்கையில் துவண்டு போகும்போதெல்லாம் இந்த பொன்மொழிகளை நினைவில் கொள்ளுங்கள்!

“இந்த பூமியில் பெண்ணாய் பிறப்பதற்கு யாரும் செய்யாத பெரும் தவம் செய்திருக்க வேண்டும்” என்கிறார்  கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

சரி இப்போது பெண் பற்றிய சில பொன்மொழிகள் பார்க்கலாம். இது பல நாடு அறிஞர்கள் மற்றும் சான்றோர்கள் சொன்ன பொன்மொழிகள் தொகுப்பு!

பெண் பற்றிய பொன்மொழிகள்

பெண் பற்றிய பொன்மொழிகள் – 30

கீழே பெண்கள் பற்றிய 30 பொன்மொழிகள் தொகுக்கப்பட்டுள்ளது!

மங்கையா ராகப் பிறப்பதற்கே – நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
– கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால் அதை ஆணிடம் சொல்லுங்கள். ஆனால்..
ஒரு விஷயத்தை செய்து முடிக்க வேண்டும் என்றால் அதைப் பெண்ணிடம் மட்டும் சொல்லுங்கள்
மார்கரெட் தட்சர்

எந்த வீட்டில் பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அந்த வீட்டில் தேவதைகள் தங்கும்.
மனு

இறைவனின் படைப்புகளில் எல்லாம் மேலானது பெண் மட்டுமே! அதிலும் அழகான படைப்பு!
– மில்டன்

வாழ்க்கை எனும் மிகப்பெரிய கடலைக் கடக்க, பெண் என்ற கப்பல் அவசியம் தேவை.
– கண்டேகர்

பெண்ணின் அன்பும் பண்பும் எங்கிருக்கிறதோ, அங்கு உலகையே காணலாம்.
– மாபசான்

ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு சமம்
– டிக்கன்ஸ்

அன்பு செலுத்தும் ஒரு பெண்ணின் மணம் எப்போதும் இளமை உடையது
– டேவிட்ஹ்யூம்

ஆவதும் பெண்ணாலே அல்லல் அழிவதும் பெண்ணாலே
– பெண் பற்றிய தமிழ் பொன்மொழி

பரிபூரணம் அடைந்த பெண் தான் உலகத்தின் மிகசிறந்த பொருள்!
-லவல்

ஒரு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் அவதூறாய் வரும் சொல் கூட பலமிழந்து மடிந்து விடுகிறது.
-ஹீஸ்

இறையன்பு வளரும் ஒரே இடம் பெண்ணின் மடி மட்டுமே!
– இக்பால்

பெண்ணின் வாழ்வு அன்பின் அடையாளம்.
-துவிஜேந்திரலால்

பெண்கள் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறார்களோ, அதைப் பொறுத்தே ஒரு நாட்டின் முன்னேற்றம் இருக்கும்
-ஜவஹர்லால் நேரு

பெண்ணின் எண்ணம் புயல்காற்றை விட அதிவேகம் கொண்டது
– ஷேக்ஸ்பியர்

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு போன்றது!
– லெனின்

சகிப்புத் தன்மைக்கு எடுத்துக்காட்டை விளங்குபவள் பெண்!
– காந்தியடிகள்

ஆண் தனக்குத் தெரிந்ததைச் சொல்வான். ஆனால் பெண் பிறர்க்கு மகிழ்ச்சி தருவதை மட்டுமே சொல்வாள்!
– ரூஸோ

ஒரு பெண்ணைச் சிரிக்க வைக்க தெரிந்தவனுக்கு, இவ்வுலகில் எதையும் செய்யும்திறமை இருக்கும்.
-மர்லின் மன்றோ

அன்பு காட்டுவதில் ஆண்கள் கஞ்சர்கள், ஆனால் பெண்கள் மிகப்பெரும் வள்ளல்கள்.
-அல்போன்ஸ் டி லாமர்டைன்

நீ நேசிக்கவே பெண் இருக்கிறாள், புரிந்து கொள்ளப்படுவதற்காக அல்ல.
-ஆஸ்கார் வைல்ட்

என்ன தான் ஆண்கள் பேசினாலும், பெண்ணில் ஒரு உணர்விற்கு அது ஈடாகாது!
– வால்டேர்

“ஒரு சக்திவாய்ந்த பெண்ணாக இருப்பதற்கு எப்போதும் மன்னிப்பு கேட்காதீர்கள்.”

ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக நிற்கும் போது, ​​அவள் எல்லா பெண்களுக்காகவும் நிற்கிறாள். -மாயா ஏஞ்சலோ

பெண் மிகவும் சக்தி வாய்ந்தவள்! அவள் பயப்படாததால் அல்ல, பயம் இருந்தபோதிலும் அவள் மிகவும் வலுவாகச் இருப்பதால்!
– ஆத்திகஸ்

பெண்கள் தேநீர் பைகள் போன்றவர்கள். வெந்நீரில் இருக்கும் வரை அவர்களின் உண்மையான பலம் நமக்குத் தெரியாது.
– எலினோர் ரூஸ்வெல்ட்

ஒரு பெண்ணிடம் இரண்டு விஷயங்கள் இருக்க வேண்டும்: ஒன்று கம்பீரம் மற்றொன்று அற்புதம்
– கோகோ சேனல்

பெண்களின் மௌனத்தின் கர்ஜனையை என்னால் கேட்க முடிகிறது!
– தாமஸ் சங்கரா

உலகில் பயன்படுத்தப்படாத திறமைகளின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் பெண்கள்.
– ஹிலாரி கிளிண்டன்

பெண் மட்டுமே மனிதனின் உயர்ந்த செயல் அனைத்திற்கும் விருட்சம்!
– ஜேம்ஸ் எல்லீஸ்

பெண் பற்றிய பொன்மொழிகள்! Quotes and Mottoes about Women!

மேலும் படிக்க

பெண் பற்றிய பொன்மொழிகள்

மேற்கூறிய பெண் பற்றிய பொன்மொழிகளில் இருந்து, பெண் என்பவள் மிகவும் அவசியமானவள் என்றும் நிச்சயமாக அவளே இந்த தேசத்தின் பெருமை என்பதும் மிகவும் வெளிப்படையானது.

ஆண்களைப் போலவே பெண்களும் சமூகத்தில் முக்கியமானவர்கள். அவர்கள் ஒரு முன்னேறும் தேசத்திற்கு முதுகெலும்பு.

வீட்டைப் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பது முதல் பணியிடத்தில் சிறந்த விளைவுகளைச் சித்தரிப்பது வரை அனைத்தையும் ஒரு பெண்ணால் செய்ய முடியும்.

எனவே, நம் நாட்டின் குடிமகன் என்ற முறையில், பெண்களை அவர்களின் கடமைகளுக்கு மதிப்பதும் பாராட்டுவதும் நமது கடமையாகும்.

பெண் பற்றிய பொன்மொழிகள்! Quotes and Mottoes about Women! In other words, women are the miraculous power that we should cherish and protect in this world! On the occasion of Women’s Day, let’s learn about the “Mottoes of Women”.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top