கேரள பெண்களின் அழகு குறிப்புகள் | Kerala Beauty Tips in Tamil

கேரள பெண்களின் அழகு குறிப்புகள் | Kerala beauty tips for Glowing skin in Tamil and Kerala girls beauty secrets for fair skin.

கேரளா பெண்கள் முகம் பொலிவு பெற அவர்கள் பயன்படுத்தும் Face pack என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். பெண்கள் என்றாலே அழகு தான், அதிலும் கேரள பெண்கள் என்றால் அழகுக்கு அழகு என்று  சொல்லலாம்.

கேரள பெண்கள்  தங்களுடைய முகபொலிவுக்கு  இயற்கை முறையில் தயாரிக்கும் கிரீம்களைதான் பயன் படுத்துவார்கள். அதிலும் கேரள பெண்கள் வீட்டில் தயாரிக்கும் முக பேஸ்ட்டை அதிகம் பயன்படுத்துவார்கள்.

இரசாயனம் கலந்த கிரீம்களையும் பயன்படுத்த மாட்டார்கள் (Kerala Tips For Glowing Skin). இப்போது முக அழகை பராமரிக்க இயற்கைப் பொருட்களை கேரள பெண்கள் எவ்வாறு  பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.

kerala beauty tips in tamil

கேரள பெண்களின் அழகு குறிப்புகள்

கேரள பெண்களின் அழகு குறிப்புகள் | Kerala Tips for Glowing Skin in Tamil and Kerala girls beauty secrets for fair skin.

1. மஞ்சள்

மஞ்சளை கேரள பெண்கள் மிக நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். மஞ்சளும் சந்தனமும் கலந்த கலவையை சருமத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக கருதுகிறார்கள்.

ஏனெனில் மஞ்சளும் சந்தனமும் கலந்த கலவை சருமத்திற்கு ஒரு அழகான தங்க நிறத்தை அளிக்கிறது. முகப்பரு  மற்றும் அலர்ஜியை போக்குகிறது.

மஞ்சள் மற்றும் சந்தன கலவை, நோய் தொற்று மற்றும் முகத்தில் உள்ள  தழும்புகளையும் மறைய செய்யும்.

மேலும் சருமத்தை மென்மையாக்கி முகத்தின் நிறத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் கேரள பெண்கள் மஞ்சளை அதிகம்  பயன்படுத்துகிரர்கள்.

கேரள பெண்கள் பயன்படுத்தும் மஞ்சளுடன் எலுமிச்சை சாறு.

எலுமிச்சை தோல் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை அகற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மேலும் பாசி பருப்பு மாவுடன், எலுமிச்சை சாறு, மற்றும் மஞ்சள் கலந்த கலவை முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தில் எண்ணெய் வடித்தலையும் முகப்பரு வராமலும் தடுக்கிறது.

மேலும் முகத்தை அழகாகவும் மென்மையாகவும் வைக்கிறது.இதனால் தான் கேரள பெண்கள் முகம் அழகாக இருக்கிறது.

கேரள பெண்கள் பயன்படுத்தும் மஞ்சள் எலுமிச்சைபழ சாறு, பாசிப்பருப்பு மாவு பேஸ்ட் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம் .

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு  மாவு இரண்டு தேக்கரண்டி
  • மஞ்சளை அரை டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி
  • சிறிது தண்ணீர்

செய்முறை

  • ஒரு கிண்ணத்தில் பாசிப்பருப்பு மாவு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
  • பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு,  மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல செய்யவும்.
  • இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர விடவும்.
  • உலர்ந்த  பிறகு முகத்தை கழுவி விடவும்.

இதை  போல் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம்.

Read Also: 7 எளிய பச்சை பயிறு அழகு குறிப்புகள்

2. கற்றாழை

கற்றாழையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. நாம் அதை நேரடியாக முகத்தில் தடவலாம்.

கேரள மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, சருமம் பொலிவு பெறவும், மலச்சிக்கல் தீரவும் கற்றாழையை பயன்படுத்துகின்றனர்.

கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் ஆகியவை நிரம்பி உள்ளது. அதனால் அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு தீர்வு கற்றாழை ஆகும்.

கற்றாழை சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. கற்றாழையில்  98% நீர் சத்து உள்ளது. இதனால் உடல் குளிர்ச்சி அடைகிறது, சருமத்தை  மென்மையாக்கி சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் அலர்ஜியை தடுக்கிறது.

தோல் சுருக்கம் வராமல் தடுக்கிறது. இதனால் கேரள பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

கற்றாழை மற்றும் எலுமிச்சை சருமத்தை மிளிர  செய்யும் (kerala beauty tips in tamil)

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.

கற்றாழை மற்றும் எலுமிச்சை ஆகியவை சருமத்தை மிளிர செய்வதற்கு சிறந்த கலவையாகும். கற்றாழை சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. சருமத்தை மென்மையாக மாற்றவும் இறந்த செல்களை நீக்கவும் கற்றாழை உதவுகிறது.

சருமத்தை வெண்மையாக்க கற்றாழையில் பல வேதி பொருட்கள் உள்ளன. கற்றாழையில் உள்ள ‘அலோயின்’ என்ற வேதிப்பொருள் தோலில் இருக்கும் மெலனின் நிறமியைக் குறைத்து, மெலனின் உருவாவதைத் தடுக்கிறது.

தோலில் உள்ள கரும்புள்ளிகளுக்கு (ஹைப்பர் பிக்மென்டேஷன்) மெலனின் தான் காரணம். சருமத்தை வெண்மையாக்க கற்றாழையை எவ்வாறு கேரள பெண்கள்  பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல்
  • எலுமிச்சை சாறு

செய்முறை

  • கற்றாழை மற்றும் எலுமிச்சை கலவை உருவாக்க, இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அதில் நான்கில் ஒரு பங்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • பின் அந்த கலவையை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
  • பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இதை  தினமும்  பயன்படுத்தலாம்  வறண்ட சருமம்  மற்றும் புண்கள்  இருந்தால், எலுமிச்சை எரிச்சலூட்டும். ஆகையால்  இந்த பேஸ்ட்டை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

Read Also: கற்றாழையை முகத்தில் பயன்படுத்துவது எப்படி?

3 கேரள பெண்கள் முகம் பொலிவு பெற பயன்படுத்தும் கடலை மாவு (பாசிப்பருப்பு மாவு)

கடலைமாவு  அல்லது பாசிப்பருப்பு  மாவு சரும பராமரிப்புக்கும் வீட்டு வைத்தியதிற்கும் மிகவும் பயன் உள்ள பொருள் ஆகும்.

இது தோல் சுருக்கங்களை நீக்கி சருமத்தை அழகுற செய்கிறது. சருமத்திற்கு அழகான பிரகாசத்தை அளிக்கிறது.

கடலை மாவு,  சருமத்திற்கு பல நன்மைகள் அளிக்கிறது. அதனால் தான் கேரள பெண்கள் இந்த கலவையை அதிகம் பயன்படுத்துகிறார்கள் .

கடலை மாவை நாம் அன்றாடம் பயன் படுத்துவதால் முகம்  ஜொலிஜொலிப்புடன் திகழும்.

சருமத்தை இளமையாக வைக்க இந்த மாவு கலவையை எப்படி பயன் படுத்துவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கடலைமாவு அல்லது பாசிப்பருப்பு மாவு 3 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு  1 தேக்கரண்டி.
  • பால் கிரீம்  1 தேக்கரண்டி

செய்முறை

மாவு ஃபேஸ் பேக் எப்படி செய்வது.

  • கடலைமாவுடன் எலுமிச்சை சாறு மற்றும்  பால்கிரீம் 1 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட் போலே நன்றாக கலக்கவும்.
  • இந்த கலவையை முகத்தில் தடவி  சுமார் 15-20 நிமிடங்கள் வைத்திருங்கள்.பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.

இதே மாதிரி வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

4. உருளைக்கிழங்கு சாறு

கேரள பெண்கள் முகம் பொலிவு பெற  உருளைக்கிழங்கு சாறை எவ்வாறு பயன் படுத்துகிறார்கள் என்பதையும் அதன்  நன்மையையும் பார்ப்போம்.

உருளைக்கிழங்கு சாறு நம் சருமத்தை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மிளிரச் செய்யும் சக்தி கொண்டது.

வைட்டமின் சி நிறைந்த உருளைக்கிழங்கில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்தால், இயற்கையாகவே வெண்மையாக்கும் செயல் திறன் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.

கேரள பெண்கள் உருளை கிழங்கு சாறை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவோம் .

தேவையான பொருட்கள்

  • ஒரு பெரிய உருளை கிழங்கு
  • பருத்தி (காட்டன்)துணி

செய்முறை

  • உருளை கிழங்கை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அம்மியில் அரைத்து சாறு பிழிந்து கிண்ணத்தில் வைத்து  கொள்ளவும்.
  • இந்த சாறை  4 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில்வைத்து பயன்படுத்தலாம். கெடாமல் இருக்கும்
  • கிண்ணத்தில் இருக்கும் உருளை கிழங்கு சாறை பருத்தி துணியால் நனைத்து முகத்தில் தடவி 15 முதல் 20 மிடங்கள் உலர விடவும்.
  • பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இந்த முறையை வாரத்தில் மூன்று நாட்கள் செய்யலாம்.இவ்வாறு செய்வதால் முகம் வெள்ளையாகவும்முகம் பொலிவாகவும் மற்றும் அழகாகவும் இருக்கும்

மேலும் தகவல்

  • ஒரு உருளைக்கிழங்கை தோலுரித்து மிகச் சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  • வெட்டியா துண்டை முகத்தில் கருமை உள்ள இடத்தில் மென்மையாக தேய்கவும்.
  • 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைக்கவும்.

கருமை நிறங்கள்  மாறி முகம் மிளிரும். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

5.கேரள பெண்கள் முகம் அழகு பெற  பயன்படுத்தும்  பப்பாளி + தேன்

பப்பாளி இயற்கையாகவே சருமத்தை வெண்மையாக்கும் தன்மை கொண்டது. வீட்டு வைத்தியம் மூலம் நம் சருமத்தை அழகுபடுத்த பப்பாளி சிறந்த பழம்.

பப்பாளியில் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் பப்பெய்ன் போன்றவை சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றவும், இறந்த சரும செல்களை அகற்றவும், முகப்பரு தழும்புகள் மற்றும் தழும்புகளை போக்கவும் மிளிரும் சருமத்தை வெள்ளையாக்கவும்  உதவும்.

சருமத்தை வெண்மையாக்க கேரள பெண்கள் பயன் படுத்தும் பப்பாளி பழம் + தேன். வீட்டு வைத்தியத்தை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழம் அரை கப்
  • தேன் ஒரு தேக்கரண்டி

செய்முறை

  • அரை கப் பப்பாளி பழ துண்டுகளை எடுத்து, மென்மையான பேஸ்ட் ஆகும் வரை பிசைந்து கொள்ளவும்.
  • பேஸ்ட்டில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பிறகு  முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  • பின்னர்  முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைக்கவும்

6. கேரள பெண்கள் முகம் பொலிவு பெற பயன் படுத்தும்  சீரகம் (ஜீரா) விதைகள்

சீரகம் (சீர் +அகம் ) சீரகம் அகத்தை சீரக வைக்க சீரகம் உதவுகிறது என்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

எல்லா உணவிற்கும் சுவை சேர்க்க சீரகம் தேவைப்படுகிறது. இது நம் சருமத்திற்கு மிகவும் பயனுள்ள மசாலாப் பொருட்களிலும் ஒன்றாகும்.

சீரகத்தில் உள்ள வைட்டமின் ஈ, முன்கூட்டியே வரும் வயதான தோற்றத்தை  தடுக்கிறது. அதுமட்டுமல்ல! சீரகம்  முகப்பரு, பருக்கள், அரிக்கும் தோலழற்சி மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது.

மேலும் தோலில் இருக்கும் நச்சுகளை நீக்கி, அழகான, மிளிரும் பிரகாசமான சருமத்தை பெற உதவுகிறது.

தங்கள் சருமத்தை வெள்ளையாக்க கேரள பெண்கள் பயன்படுத்தும் வீட்டு வைத்தியாமான இந்த சீரகத்தை, நாமும் தினமும் பயன்படுத்தப்படலாம்.

தேவையான பொருட்கள்

  • சீரகம் ஒரு தேக்கரண்டி
  • இரண்டு கப் தண்ணீர்

செய்முறை

  • ஒரு தேக்கரண்டி சீரகத்தை இரண்டு கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் ஒரு கப்பாக வற்றியதும் இறக்கி ஆற விடவும்.
  • ஆறியதும், அந்த நீரில் முகத்தை கழுவி மென்மையான துணியால் துடைக்கவும்.

7. கேரள பெண்கள் முகம் பொலிவு பெற பயன்படுத்தும் சந்தனம்

காலங்காலமாக சருமத்தை ஒளிரச் செய்யும் மருந்தாகப் சந்தனத்தை பயன்படுத்துவது இயல்பான நடைமுறை.

சந்தனத்தில் காயங்கள் குணப்படுத்தும் தன்மை உள்ளது. சந்தனம் வயதான தோற்றத்தை குறைக்கிறது. முகத்தில்உள்ள கருமையை போக்குகிறது.

தோல் தடிப்பை குணப்படுத்துவது மற்றும் சருமத்தை உள்ள பழுப்பு நிறத்தைக் குறைப்பது வரை எல்லா நன்மைகளையும் செய்கிறது.

சந்தனம் சருமத்திற்கு ஒரு அதிசய மூலப்பொருளாகும். சந்தனத்தில் இயற்கையான சருமத்தை ஒளிரச் செய்யும் பொருட்கள் இருப்பதால் , சருமத்தை மேம்படுத்த ஃபேஸ் பேக்குகளில் பயன்படுத்தலாம்.

கேரள பெண்கள் பயன் படுத்தும் சந்தனம் பேஸ்ட் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • சந்தானம்தூள்  ஒரு தேக்கரண்டி.
  • பாதம் தூள்ஒரு தேக்கரண்டி.
  • சிறிது பால்.

செய்முறை

  • சந்தன தூள் மற்றும் பாதாம் தூள் கலந்து கொள்ளவும்.
  • மென்மையான பேஸ்ட்டை உருவாக்க சிறிது பால் சேர்த்து கலந்து இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் உலர விடவும்
  • பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இந்தமுறையை வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம்.

மேலும் சில அழகு குறிப்புகள்

கேரள பெண்களின் அழகு குறிப்பு..! kerala beauty tips in tamil

கேரள பெண்ககள் முகம் அழகாகவும் மென்மையாகவும்  இருப்பதற்கு, முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் தினமும் குளிப்பதற்கு முன் சருமத்திற்கு மஞ்சள், சந்தனம், கடலை மாவு (அல்லது) பாசி பருப்பு மாவு என்று ஏதாவது ஒன்றை  பயன்படுத்துவார்கள்.

மேலும் கேரள பெண்கள் முகத்திற்கு உருளை கிழங்கு சாறு, சீரக தண்ணீர் மற்றும் பப்பாளி +தேன் பேஸ்ட்டை பயன்படுத்துவதால், கேரளபெண்கள்  முகத்தில் பருக்கள் இல்லாமலும் கரும்புள்ளிகள் இல்லாமலும் முகம் பளிச்சென்று இருக்கிறது.

நீங்களும் மேலே சொல்லியிருக்கும் கேரள பெண்கள் முகம் பொலிவு பெற பயன்படுத்தும் போஸ்ட்டை பயன்படுத்துங்கள். முகம் பொலிவுற செய்யுங்கள். அழகுக்கு அழகு சேருங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top