முகத்தை வெள்ளையாக மாற்ற எளிமையான அழகு குறிப்புகள் | Simple Face Brightness Tips In Tamil

முகத்தை வெள்ளையாக மாற்ற எளிமையான அழகு குறிப்புகள் | Simple Face Brightness Tips In Tamil. Beauty tips for face whitening in Tamil.

அழகான வெண்மையான முகம் வேண்டும் என்று பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே நினைப்பதுண்டு. அனைவரும் முகத்தை அழகாக பராமரிக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள்.

ஆனால் அவர்களால் அதற்கான பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்க இயலாது. மேலும் அதற்கான பராமரிப்புகளை தொடர்ந்து செய்ய முடிவதில்லை.

அதற்கு பதிலாக வீட்டில் உள்ள எளியபொருட்களை கொண்டு முகத்தை வெள்ளையாக மாற்ற கூடிய அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

face brightness tips in tamil

முகத்தை வெள்ளையாக மாற்ற எளிமையான அழகு குறிப்புகள்

1. தக்காளி – Face Brightness Tips In Tamil

தக்காளி முகத்தில் உள்ள அதிக அளவு எண்ணெய் பசையை நீக்க உதவும். முகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட செல்களை நீக்கி முகம் பொலிவாக இருக்க தக்காளியை பயன்படுத்தலாம்.

சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இளமையாக வைத்திருக்கவும் தக்காளி உதவும். வெயிலில் இருந்து சருமத்தை கருமை ஆகாமல் பாதுகாக்கிறது.

இதனால் முகம் மேலும் அழகாக மாற தக்காளி உதவுகிறது. beauty tips for face whitening in tamil

தேவையான பொருட்கள்

  • இரண்டு தக்காளி
  • எலுமிச்சைச் சாறு இரண்டு ஸ்பூன்

செய்முறை

  • இரண்டு தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து கொள்ளுங்கள்.
  • அரைத்த தக்காளியை வடிகட்டி அதன் சாறை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து கொள்ளுங்கள்.
  • தக்காளி சாறுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
  • கலந்து வைத்து கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற விடவும்.
  • 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து பாருங்கள் முகம் வெள்ளையாக அழகாக மாறிவிடும்.

2. உருளைக்கிழங்கு – Face Bright Tips In Tamil

வெயிலினால் சருமத்தில் ஏற்படும் கருமையை நீக்கி சருமத்தை வெள்ளையாக மாற்றி பொலிவாக இருக்க உருளைக்கிழங்கு உதவும்.

முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை நீக்கி முகம் பொலிவடைய செய்யும். முகப்பருக்களை நீக்கவும், முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை அகற்றவும் (Face Brightness potato face pack) உருளைக்கிழங்கு உதவும்.

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு ஒன்று

முதல் செய்முறை 

  • ஒரு உருளைக்கிழங்கை தோல் உரித்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.
  • வெட்டிவைத்த உருளைக்கிழங்கை மைய அரைத்து கொள்ளுங்கள். அரைத்த வைத்த உருளைக்கிழங்கை முகத்தில் பூசி மசாஜ் செய்து இருபது நிமிடம் ஊறவிட வேண்டும்.
  • பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

இரண்டாவது செய்முறை

  • வெட்டிவைத்த உருளைக்கிழங்கை மைய அரைத்து கொள்ளுங்கள்.
  • அரைத்து வைத்த உருளைகிழங்கை வடிகட்டி அதன் சாறை பஞ்சில் (Cotton) நனைத்து முகத்தில் மசாஜ் செய்து இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  • பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

இவ்வாறு வாரம் ஒரு முறை செய்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் அழகாக மட்டும்.

3. அரிசி மாவு – Face Whitening Tips Tamil

அரிசி மாவு முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்கும். முகத்தில் ஏற்படும் தோல் சுருக்கங்களை சரிசெய்து இளமையாக மாற்றும்.

ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள மாசுகளை நீக்க உதவும். அரிசி மாவுடன் எலுமிச்சை சாறு சேர்ப்பதால் முகத்தில் இருக்கும் துளைகளை சரிசெய்ய உதவும். tamil beauty tips for face

தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு இரண்டு டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • கலந்து வைத்த அரிசி மாவை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊறவிடவும்.
  • பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள்.

வாரம் இரு முறை இதை செய்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் மாறும்.

4. தயிர் – Beauty Tips For Face Whitening In Tamil

தயிர் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். சருமத்தில் உள்ள வறட்சி தன்மையை நீக்கி ஈரப்பதம் அளிக்கும்.

முகத்தில் ஏற்படும் துளைகளை நீக்கும். முக சோர்வை நீக்கி சருமத்தை பளபளப்பாகும். முகத்தில் உள்ள தோல் சுருக்கத்தை நீக்கி முகத்தை இளமையாக வைத்திருக்க உதவும். skin whitening tips tamil

தேவையான பொருட்கள்

  • புளித்த தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் அரை டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • ஒரு சுத்தமான கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் புளித்த தயிரை எடுத்து கொள்ளுங்கள்.
  • புளித்த தயிருடன் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
  • பின்னர் கலந்து வைத்த தயிரை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
  • மசாஜ் செய்த பின் 30 நிமிடம் முகத்தில் காயவிடவும்.
  • பின் லேசான குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

வாரம் ஒரு முறை இவ்வாறு செய்தால் போதும் முகம் இளமையாகவும் , பளபளப்பாக மாறும்.

5. பப்பாளி பழம் – Face Brightening Mask In Tamil

முகத்தில் ஆழமாக படிந்திருக்கும் அழுகை நீக்க பப்பாளி பழம் உதவும். முகத்தில் உள்ள அதிகமான எண்ணெய் பசையை நீக்கும்.

சருமத்தில் உள்ள ஈர பதத்தை தக்கவைக்க உதவும். வெயிலினால் இழந்த சரும பொலிவை மீட்க உதவும். (face beauty tips tamil)

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழம் (2 பெரிய துண்டுகள்)
  • காய்ச்சாத பால் ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • பப்பாளி பழ துண்டுகளை நன்றாக மசித்து கொள்ளவும்.
  • மசித்த பப்பாளியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • கலந்து வைத்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள்.
  • மசாஜ் செய்த பிறகு 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  • பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

மாதம் இரு முறை இவ்வாறு செய்தால் போதும் முகம் வெள்ளையாக பொலிவாக மாறும்.

6. கடலை மாவு – Face Whitening Mask In Tamil

முகம் பளபளப்பாக மாற கடலை மாவு உதவும். முகப்பருக்களை நீக்க உதவும்.

சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை வேரிலிருந்து வளர்வதை தடுக்க உதவும். வெயிலினால் முகத்தில் ஏற்படும் கருமையை நீக்கும்.

தோல் சுருக்கம் ஏற்படாமல் சருமம் இறுக்கமாக வைத்திருக்க உதவும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவும். (face beauty tips tamil)

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு இரண்டு டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன்
  • புளித்த தயிர் ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  • அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • கலந்து வைத்த கடலை மாவை முகத்தில் தடவுங்கள்.
  • முகத்தில் தடவிய பிறகு 20 நிமிடம் ஊறவிடவும்.
  • பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள்.

வாரம் ஒரு முறை இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கி முகம் வெள்ளையாக பளபளப்பாக மாறும்.

மேலும் சில அழகு குறிப்புகள்

அழகான வெள்ளையான முகத்தை பெறுவது அனைவருக்கும் மிகவும் கடினமான ஒரு விஷயமாகவே உள்ளது.

அதற்கு காரணம் வெயில், தூசி, முகப்பரு, தோல் சுருக்கம், முகத்தில் படியும் அழுக்கு, முகத்தில் உள்ள துளைகள். இவை அனைத்தும் முகம் பளபளப்பாக மாற தடையாக உள்ளது. daily face care tips in tamil

இந்த சரும பிரச்சனைகள் அனைத்தையும் குறைந்த செலவில் வீட்டில் உள்ள எளிமையான பொருட்களை கொண்டு உங்கள் முகத்தை வெள்ளையாகவும் அழகாகவும் பராமரிக்க முடியும். Simple Face Brightness Tips In Tamil.

எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி சருமத்தை அழகாக பராமரிக்கும் வழிமுறைகளை மேலே பட்டியலிட்டுள்ளோம்.

இதன் மூலம் நீங்கள் முகத்தை வெள்ளையாக மாற்ற எளிமையான அழகு குறிப்புகள் தெரிந்து கொண்டு பயன் பெறலாம். face whitening home remedy in tamil

Here we have listed the 6 best face brightness tips in tamil. You can try these proven beauty tips for face whitening in Tamil. Try these natural face beauty tips in tamil and tell the experience in the comments. All the best to get face whitening tips in tamil.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top