முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள் Mugam Polivu Pera Tamil Tips

முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள் என்ன? முகம் பொலிவு பெறுவது எப்படி? mugam polivu pera tamil tips

பொலிவான முகத்தை பெறுவது எளிது தான். ஆனால் இது சில வாரங்கள் பிடிக்கும்.

முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்? முகம் பொலிவு பெற இயற்கையான சில வழிகள் இங்கே பட்டியலிட பட்டுள்ளன. முகம் பொலிவு பெற டிப்ஸ்.

Mugam Polivu Pera Tamil Tips

முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள்

1. முகம் பொலிவு (அழகு) பெற மஞ்சள்

மஞ்சள் இயற்ககையாகவே கிருமி நாசினியாகும். நோய் எதிர்ப்பு சக்தி மஞ்சளில் அதிகமாக உள்ளது.

மஞ்சள் தெய்வீக  மணம் கொண்டது. மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளதால் அலர்ஜி மற்றும் முக வீக்கம் போன்றவையை போக்குகிறது.

மேலும் முகப்பொலிவை தருகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியையும், முகத்திற்கு பளபளப்பையும் தருகிறது.

மஞ்சள் வறண்ட சருமத்தை அழகுற செய்கிறது. முகத்திற்கு மஞ்சள் பேஸ்ட்டை எப்படி பயன் படுத்தலாம் ?

மஞ்சள் பேஸ்ட் தயாரிக்க தேவையான பொருட்கள்

  • கடலை மாவு அல்லது பாசி பருப்பு மாவு :50 கிராம்
  • சுத்தமான மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  • பன்னீர் சிறிதளவு
  • தண்ணீர் அல்லது பால் தேவையான அளவு

முகத்திற்கு மஞ்சள் பேஸ்ட்டை எப்படி பயன் படுத்தலாம்?

முகம் பொலிவு பெற இயற்கையான இந்த மஞ்சள் பேஸ்டை பயன்படுத்தலாம்.

  • கடலை மாவுடன் சுத்தமான மஞ்சள் தூளை கலக்க வேண்டும்.
  • பிறகு தேவையான அளவு பால் அல்லது தண்ணீர் ஊற்றி மைபோல் நன்றாக கலக்கவும். பிறகு சிறிது பன்னீர் தெளித்து கலந்தால் அருமையான பேஸ்ட் ரெடி.
  • இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.
  • 20 நிமிடம் பேஸ்ட்டை காய விடுங்கள்.
  • காய்ந்த பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதால் முகம் பளப்பளப்பாகவும் மென்மையாகவும் மற்றும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

2. முகப்பொலிவு தரும் தேன்

கோடை காலத்தில் சருமத்தை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்து கொள்வது?

முகப்பருகள், தழும்புகள் மற்றும் முகத்தில் எண்ணெய் வடிதலை போக்க தேன் உங்களுக்கு உதவும்.

தேவையான பொருள்

  • சுத்தமான தேன்

செய்முறை

  • தேன் இயற்கையாகவே ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ளும் மருத்துவ குணம் கொண்டது.
  • ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தேனை எடுத்து கொள்ளவும். முகத்தை நன்றாக கழுவி, ஈரம் காய்ந்த பின்னர் முகம் கழுத்து பகுதியில் தடவவும்.
  • பின்னர் மென்மையாக நீவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும் .

இவ்வாறு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

  • முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகும்.
  • முகப்பருக்கள் வராது.
  • முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
  • முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையும் போகும்.
  • முகம் பொலிவாகவும் பளப்பளப்பாகவும் மின்னும்.

3. முகம் பொலிவு பெற வறண்ட சருமம் பளபளக்க ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் எப்படி பயன்படுத்துவது?

தினமும் படுக்கைக்கு செல்லும் முன் சிறிது ஆலிவ் எண்ணெய் எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக தடவி விடவும் ஐந்து நிமிடங்கள் மேல் நோக்கி மென்மையாக அழுத்தம் கொடுத்து நீவி விடவும் .

20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் டவலை நனைத்து முகம் கழுத்து பகுதியில் துடைக்க வேண்டும்.

பிறகு மற்றொரு துணியால் மீதம் இருக்கும் எண்ணெய் பசையை துடைக்கவும். இதை வாரம் இருமுறை செய்யலாம்.

இவ்வாறு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

  • ஆலிவ் எண்ணேய் சருமத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
  • சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய தோல் புற்றுநோய் செல்களை அழித்து புற்று நோய் வராமல் தடுக்கும்.
  • சருமம் பாதிப்பு அடையாமல் காக்கும்.
  • மேலும் முகம் பொலிவு பெறவும் பளபளப்பு பெறவும் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது.
  • முகம் பொலிவு பெற முகப்பருக்கள் வராமல் தடுக்க ஆலிவ் எண்ணெய் எடுத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக தடவி விடவும்.

4. ஆரஞ்சு பழ சாறு

தினமும் ஆரஞ்சு பழ சாற்றால் முகத்தை கழுவி வந்தால் முகம் பொலிவு பெறுவதுடன் சருமமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

தேவையான பொருள்

  • ஆரஞ்சு பழ சாறு தேவையான அளவு.
  • கொஞ்சம் ஆரஞ்சு தோல்.
  • சிறிது பன்னீர் துளிகள்.

செய்முறை

  • ஆரஞ்சு தோலை பன்னீருடன் கலந்து நன்கு அரைக்கவும்.
  • அதில் ஆரஞ்சு பழ சாறு கலந்து பேஸ்ட் போல தயாரிக்கவும்.
  • இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவவும்.
  • 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும்

இவ்வாறு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

  • ஆரஞ்சு பழ சாற்றில் வைட்டமின் சி சத்து நிறைத்து உள்ளது.
  • வைட்டமின் சி  சத்தும் சிட்ரிக் அமிலமும் உள்ளதால் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. மேலும் முகம் பொலிவு பெறவும், சருமம் புத்துணர்ச்சி பெறவும் செய்கிறது.

தினமும் காலையில் ஒரு டம்ளர் ஆரஞ்சு பழ சாறுடன், சிறிது உப்பு சிறிது மிளகு தூள் கலந்து காலை உணவுக்கு பின் சாப்பிடலாம்.

5. பச்சை பசும் பால்

முகப்பரு, வறண்ட சருமம் மற்றும்  எண்ணெய்  வடிதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு பால் மிக சிறந்த தீர்வு!

தேவையான பொருள்

  • காய்ச்சாத பசும் பால்
  • சிறிது பஞ்சு

செய்முறை

  • காய்ச்சாத பசும் பால் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும்.
  • அதை பஞ்சால் நனைத்து முகம் முழுவதும் தடவி விடவும். முகம் உலர்ந்த பிறகு, குளிர்ந்த நீரில் கழுவவும்.

இவ்வாறு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

காய்ச்சாத பசும் பால் சருமத்தில் உள்ள டைரோசினை கட்டுபடுத்தும். அதனால் முகம் வெண்மை அடைகிறது.

முகம் வெண்மை அடைவதுடன், முகத்தை பளப்பளப்பாகவும் அழகாகவும் மிளிர செய்கிறது.

6. முகம் பொலிவு பெற கற்றாழை சாறு

கற்றாழை சாறை அனைவரும் பயன்படுத்தலாம். வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம், மற்றும் சாதாரண சருமம் என அனைவரும் பயன்படுத்தலாம்.

கற்றாழை சாறு தயாரிக்கும் முறை

  • கற்றாழை இலைகளை நேராக வெட்டி அதன் நடுவில் இருக்கும் கற்றாழை ஜெல்லை கரண்டியால் மெதுவாக எடுக்க வேண்டும்.
  • அவ்வாறு எடுத்ததை ஒரு கிண்ணத்தில் போட்டு கொள்ளலாம்.
  • அவ்வளவு தான் கற்றாழை சாறு ரெடி.

கற்றாழை சாறு எப்படி பயன்படுத்துவது

  • கற்றாழை சாறை எடுத்து அப்படியே நேராக பயன்படுத்தலாம்.
  • முகம், கழுத்து, மற்றும் கைகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும்.
  • பின் குளிர்ந்த தண்ணீரில் கழுவி துடைக்கவும்

கற்றாழை சாறு பயன்கள்

கற்றாழையில் நிறைய வைட்டமின்கள் அடங்கி உள்ளது.

கற்றாழை சாறை தோலில் பயன்படுத்துவதால் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது, முகம் பொலிவு பெற செய்கிறது, மென்மை தன்மையை மேம்படுத்துகிறது. மேலும் தோல் சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது.

கற்றாழை முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. சூரிய ஒளியால் பாதிக்கப்படும் சருமத்திற்கு கற்றாழை சாறை பயன்படுத்துவதால் சருமம் பளபளப்பாகவும் மென்மையாகவும் மிளிர்கிறது.

7. முகம் பொலிவு பெற தயிர்

தயிரை வறண்ட சருமம், எண்ணெய்பசை சருமம், மற்றும் சாதாரண சருமம் என அனைவரும் பயன்படுத்தலாம்.

முகம் பொலிவு பெற தயிரை எப்படி பயன் படுத்துவது?

  • ஒரு கிண்ணத்தில் தயிரை ஊற்றி பருத்தி துணியால் நனைத்து கொள்ளுங்கள்.
  • முகம் முழுவதும் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விடவும்.
  • பிறகு குளிர்ந்த நீரில் கழுவி துடைத்து விடவும்.

தயிரின் நன்மைகள்

தயிரில் லாக்டிக் அமிலம் (Lactic acid) அதிகமாக உள்ளது. இது நமது சருமத்திற்கு மிகவும்  நல்லது. தயிர் நமது சருமத்தை ஈரப்பதமாக வைக்கிறது.

மேலும் முக சுருக்கங்கள் மற்றும் பக்க விளைவுகள் வராமலும் தடுக்கிறது. தயிர் முகத்தில் உள்ள கருமை மற்றும் கருவளையம் வருவதை குறைகிறது.

தயிர் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி பளபளப்பாக வைக்க உதவுகிறது. மேலும் தயிர் சாப்பிடுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது.

தயிர் வெயிலைத் தணிக்கவும்  முகப்பரு வராமலும் தடுக்கிறது.

8. முகம் பொலிவு பெற  பாதம்

பாதாம் வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம், மற்றும் சாதாரண சருமம் என அனைத்து  வகை சருமத்திற்கும் ஏற்றது. mugam polivu pera tamil tips

தேவையான பொருள்

பாதாம் பேஸ்ட் தயாரிப்பது எப்படி?

  • ஊற வைத்த பாதாம் தேவையான அளவு.
  • சிறிதளவு பால்.

செய்முறை

  • பாதாமில் சிறுதளவு பால் ஊற்றி மைய அரைத்து பேஸ்ட் போல எடுத்து கொள்ள வேண்டும்.
  • அதனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் காய விடவும்.
  • பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி துடைக்கவும்.

பாதாம் பயன்கள்

பாதாமில் வைட்டமின் ஈ சத்து நிறைய உள்ளது

பாதாம் பேஸ்ட்டை தொடர்ந்து மசாஜ் செய்வதால்  சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்தில் ஏற்படும்  மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கிறது.

பாதாம் பேஸ்ட் சருமத்தை ஈரப்பதமாக்கி, முகப்பரு இல்லாமல் வைத்திருக்கும். இது முக சுருக்கம் மற்றும் கருவளையங்களை குறைக்கவும் உதவுகிறது.

மென்மையான  சருமத்திற்கு, தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை பாதாம் எண்ணெயைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யலாம்

9. முகம் பொலிவு பெற ஓட்ஸ்

முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்? ஓட்ஸை சாதாரண சருமம், எண்ணெய்பசை சருமம், வறண்ட சருமம் என அனைத்து வகையான சருமத்திற்கும் பயன்படுத்தலாம். mugam polivu pera tamil tips

தேவையான பொருள்

ஓட்ஸ் பேஸ்ட் தயாரிப்பது எப்படி?

  • ஓட்ஸ் 3 டேபிள் ஸ்பூன்
  • தயிர் 4 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை பழ சாறு சிறிதளவு

ஓட்ஸ், தயிர், எலுமிச்சை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்கவும்.

கலந்த பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி கழுவுங்கள்.

ஓட்ஸ் பேஸ்ட் பயன்கள்

ஓட்ஸ் பேஸ்ட்டில் சருமத்தின் நிறத்தை வெண்மையாக்கும் தன்மை நிறைந்துள்ளது. சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.

பருக்களை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமான துத்தநாகமும் ஓட்ஸில் நிறைந்துள்ளது. ஓட்ஸ்பேஸ்ட் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சு எடுக்கிறது மேலும் முகப்பரு வராமல் தடுக்கிறது.

ஓட்ஸ் பேஸ்ட் வறண்ட மற்றும் அரிப்பு சருமத்தை பாதுகாக்க  உதவுகின்றன. ஏனெனில் அவற்றில் உள்ள பீட்டா-குளுக்கன்கள் சருமத்தை ஈரப்பதமாக வைக்க செய்யும்.

மேலும் சில அழகு குறிப்புகள்

முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள் என்ன? முகம் பொலிவு பெறுவது எப்படி? mugam polivu pera tamil tips.

பொலிவான முகத்தை பெறுவது எளிது தான். ஆனால் இது சில வாரங்கள் பிடிக்கும்.

முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்? Mugam Polivu Pera Tamil Tips. முகம் பொலிவு பெற இயற்கையான சில வழிகள் மேலே பட்டியலிட பட்டுள்ளன. முகம் பொலிவு பெற டிப்ஸ். இவைகளை பயன்படுத்தி பொலிவான முகத்தை பெறுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top