கற்றாழையை முகத்தில் பயன்படுத்துவது எப்படி? கற்றாழை பயன்கள்

கற்றாழையை முகத்தில் பயன்படுத்துவது எப்படி? கற்றாழை ஜெல் பயன்கள். (Aloe vera gel uses and how to use aloe vera gel on face at night in tamil)

முகம் பொலிவு பெற்று அழகு பெறவும், முடி வளரவும் கற்றாழையை எவ்வாறு பயன்படுத்துவது? மேலும் கற்றாழையில் வேறு என்ன பயன்கள் உள்ளது என்று பார்க்கலாம்.

கற்றாழை அதிசயம் நிறைந்த மூலிகை செடி ஆகும். ஒரு மருத்துவ மூலிகையாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கற்றாழையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது.

செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கற்றாழை ஜெல்லை மேற்பூச்சாகவும் பயன்படுத்தலாம், கற்றாழை ஜெல் சருமம் பொலிவு பெற (குறிப்பாக முகம் அழகு பெறவும் மற்றும் முடியின் வளர்ச்சியினை மேம்படுத்தவும்) பயன்படுகிறது.

how to use aloe vera gel on face at night in tamil

கற்றாழை ஜெல்லை எவ்வாறு எடுப்பது?

வீட்டில் கற்றாழை செடி இருந்தால், அதன் கொழுந்து இலைகள் அல்லது தண்டுகளைத் தேர்ந்தெடுத்து, அதன் அடிப்பகுதியில் இருந்து வெட்டவும். அல்லது இலைகளை அவற்றின் அடிப்பகுதியில் இருந்து இழுக்கலாம். செடியில் முட்கள் இருப்பதால் கவனமாக கையாள வேண்டும்.

அதன் பிறகு ஒவ்வொரு இலையின் விளிம்பிலிருந்தும் முட்களை வெட்டுவதற்கு கூர்மையான கத்தியைப் பயன்படுத்தி முட்களை நீக்க வேண்டும்.

பின்னர் தண்டை இரண்டாக வெட்டி, ஜெல் பக்கத்தை மேலே வைக்கவும். ஒரு கரண்டியை பயன்படுத்தி ஜெல்லை எடுக்கவும்.

எல்லா ஜெல்லையும் எடுத்த பிறகு ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இந்தமாதிரி செய்வதற்கு கஷ்டமாக இருந்தால் கற்றாழை ஜெல்லை கடையிலுல் வாங்கலாம்.

கற்றாழை ஜெல்லை முகம், சருமம் மற்றும் தலைமுடியில் பயன்படுத்துவதற்கான ஆறு காரணங்கள் இங்கே உள்ளது.

1. சூரிய வெப்பத்திலிருந்து உடலை காக்க உதவுகிறது

கற்றாழை ஜெல் குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் அலர்ஜி எதிர்ப்பு சக்தி கொண்டது. எனவே, கற்றாழை ஜெல் சூரிய ஒளி அல்லது நெருப்பு பட்ட காயங்களுக்கும் மிகவும் இயற்கையான மருந்துகளில் ஒன்றாகும்.

கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவது சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கிறது. மேலும் கற்றாழை ஜெல் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது.

கற்றாழை ஜெல்லில் தாது சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சூரிய வெப்பத்திலிருந்து நம்மை காக்க உதவுகிறது .எனவே கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி கோடைகால சரும ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

2. கற்றாழை ஜெல் சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது

வழக்கமான, கடைகளில் வாங்கப்படும் மாய்ஸ்சரைசர்கள் (Moisturisers) உங்கள் முகத்தில் பிசுபிசுப்பு தன்மையை ஏற்படுத்தும். அனால் கற்றாழை ஜெல் பிசுபிசுப்பு ஏற்படுத்தாது.

கற்றாழை ஜெல் முகத்தில் உள்ள துளைகளை அழித்து சருமத்தை மென்மையாக்குகிறது. குறிப்பாக வறண்ட சருமத்தை மென்மை ஆக்குகிறது.

3. கற்றாழை ஜெல் காயங்களை வேகமாக குணப்படுத்துகிறது

கற்றாழை ஜெல் தீக்காயங்கள், வெட்டுக்கள் மற்றும் பிற காயங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏனெனில் கற்றாழை ஜெல் காயங்களை குணப்படுத்தும் நேரத்தையும் குறைக்கிறது. இது குறிப்பாக 1 வது டிகிரி மற்றும் 2 வது டிகிரி தீக்காயங்கள் விஷயத்தில் உண்மை.

கற்றாழை ஜெல் சிறந்த தோல் தீக்காயங்காய புண்களை ஆற்றுகிறது. இது தோல் செல் இனப்பெருக்கத்தை எட்டு மடங்கு வேகப்படுத்தவும் உதவுகிறது. கற்றாழை ஜெல் மேல்தோலில் ஊடுருவிச்சென்று உடலை குளிர்ச்சி அடைய செய்கிறது.

4. கற்றாழை ஜெல் தோல் சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது

கற்றாழை ஜெல்லில் வைட்டமின் சி மற்றும் ஈ, பீட்டா கரோட்டின் ஆகியவை ஏராளமாக உள்ளன.

தோல் சுருக்கத்தை எதிர்த்து போராடுகிறது. அதனால் உங்களை இளமையாக இருக்க செய்கிறது. இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கவும், முகசுருக்கங்களை குறைக்கவும் உதவுகிறது.

மேலும் ,கற்றாழை ஜெல் உடலில் கொலாஜன் உற்பத்தி மற்றும் தோல் நெகிழ்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

5. கற்றாழை ஜெல் தொற்று மற்றும் முகப்பருவை குறைக்கிறது

முகப்பருவால் அவதிப்படுபவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறைந்து விடும் நிம்மதி கிடைக்கும்.

கற்றாழை ஜெல் சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பருக்களை குணப்படுத்துகிறது. கற்றாழை ஜெல் ஒரு கிருமி நாசினியாகும், இது பாக்டீரியாக்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.

கற்றாழை ஜெல்லில்உள்ள வேதி பொருள் புதிய செல்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, வீக்கம் மற்றும் தோல் தடிப்பை குறைக்கிறது.

6. கற்றாழை ஜெல் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை ஒளிரச் செய்கிறது

கற்றாழைஜெல் சரும செல்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், தோல் தடிப்பை குறைக்கவும், தோல் அலர்ஜியை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

கற்றாழை ஜெல் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போகவும் முகப்பருக்கள் வராமல் தடுக்கவும் செய்கிறது. மேலும் கற்றாழை ஜெல் கலவையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தினால் பளபளப்பான சருமத்திற்கு கைகண்ட வீட்டு வைத்தியம்.

முடி மற்றும் உச்சந்தலைக்கு கற்றாழை ஜெல்

இப்பொழுது முடி வளர்ச்சிக்கு கற்றாழை எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம்.

1. முடி வளர்ச்சிக்கு கற்றாழை ஜெல் பெரிதும் உதவுகிறது

கற்றாழை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதனால் புதிய முடி வளர்ச்சியை கற்றாழை ஜெல் ஊக்குவிக்கிறது

கற்றாழை ஜெல்லில் முக்கியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. கற்றாழை ஜெல்லில் புரோட்டியோலிடிக் என்சைம்கள் உள்ளன, அவை உச்சந்தலையில் இறந்த செல்களை சரிசெய்ய உதவும்.

எனவே பெண்கள் மற்றும் ஆண்களின் உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

2. கற்றாழை ஜெல் தலையில் பொடுகு வராமல் தடுக்கிறது

வறண்ட சருமம், பூஞ்சை தொற்று மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை சருமத்தை குணப்படுத்த கற்றாழை ஜெல் உதவுகிறது.

அனைத்து வகையான பொடுகைப் போக்கும் இயற்கை மருந்துகளில் கற்றாழை ஜெல்லும் ஒன்று.

3. கற்றாழை ஜெல் தலை முடி மற்றும் உச்சந்தலைக்கு கண்டிஷனராக செயல்படுகிறது

கற்றாழை ஜெல் எவ்வாறு சருமத்தை ஈரப்பதமாக்குகிறதோ, அதே போல் தலை முடியை சீரமைக்கவும் மென்மையாக்கவும் கற்றாழை ஜெல் உதவுகிறது.

தலை முடி மற்றும் உச்சந்தலையில் கற்றாழை ஜெல்லைத் தவறாமல் தடவி வருவதால் தலை முடியின் வளர்ச்சியும் அதன் பளபளப்பையும் பராமரிக்க உதவுகிறது.

கற்றாழையை முகத்தில் பயன்படுத்துவது எப்படி?

கற்றாழையை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (how to use aloe vera gel on face at night in tamil)

1. கற்றாழை ஜெல் வைட்டமின் ஈ காப்ஸ்யூல் 

  • கடையில் வாங்கிய கற்றாழை ஜெல் அல்லது புதிய கற்றாழை ஜெல் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் நேரடியாக தடவவும்.
  • கற்றாழை ஜெல்லில் வைட்டமின் ஈ காப்ஸ்யூலை உடைத்து, 1 டேபிள் ஸ்பூன் ஊற்றவும்.
  • அதை நன்கு கலந்து கண்ணைச் சுற்றியுள்ள கரும்வளையம் பகுதிகளில் தடவவும்

2. கற்றாழை ஜெல், தேன், கடல் உப்பு

  • 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சிறிது கடல் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  • அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்
  • உடல் மற்றும் முகத்தில் லேசான ஸ்க்ரப்பாக பயன்படுத்தவும்.
  • பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

3. கற்றாழை ஜெல் தேன் மற்றும் ரோஸ் வாட்டர்

  • 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் , 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு மென்மையான பேஸ்டாகக் கலக்கவும்.
  • பின் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விடவும்
  • பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் – முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் வாரம் இருமுறை பயன்படுத்தலாம்.

கற்றாழையை முகத்தில் பயன்படுத்துவது எப்படி? கற்றாழை ஜெல் பயன்கள். (Aloe vera gel uses in tamil).பற்றி பார்த்தோம்.

மேலும் சில அழகு குறிப்புகள்

முகம் பொலிவு பெற்று அழகு பெறவும், முடி வளரவும் கற்றாழையை எவ்வாறு பயன்படுத்துவது? மேலும் கற்றாழையில் வேறு என்ன பயன்கள் உள்ளது என்று தெரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறோம். நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top