இந்த தக்காளி பேஸ் பேக் முகத்தை அழகாக ஜொலிக்க வைக்கும்

Tomato beauty tips for face in tamil | Tomato for face whitening in tamil | Beauty Tips Using Tomato

தக்காளி உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் சருமத்திற்கும் சிறந்தது. இந்த பதிவில் அழகான மற்றும் பளபளக்கும் முகத்தை பெற தக்காளியை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம். தக்காளி அழகு குறிப்புகள் (Tomato beauty tips for face in tamil)

அழகான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற தக்காளி நமக்கு பயன்படுகிறது. தக்காளியில் அதிகமான சத்துக்கள் உள்ளன. அது உங்கள் சருமத்தை மிளிரவும் அழகாக்கவும் உதவுகிறது. (Tomato for face whitening in tamil)

Tomato beauty tips for face in tamil

முகத்தை அழகுபடுத்தவும் பொலிவான சருமத்தைப் பெறுவும் தக்காளி உதவுமா?

தினமும்  உணவில் தக்காளியை சாப்பிடுவது, அழகான, சருமத்தைப் பெற நிச்சயம் உதவும். தக்காளியில் இயற்கையாகவே தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது. தக்காளியை சிறந்த ஃபேஸ் பேக்காகவும் நீங்கள் பயன்படுத்தலாம்.

தக்காளி இயற்கையில் சற்று அமிலத்தன்மை கொண்டது. தக்காளியில்  வைட்டமின் சி நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் முகப்பரு, கறைகள் மற்றும் சுருக்கங்களை நீக்குகிறது.

10 சிறந்த தக்காளி அழகு குறிப்புகள்

அழகான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற கிழே உள்ள தக்காளி பேஸ் பேக்குகளை பயன்படுத்துங்கள். (Tomato beauty tips for face in tamil)

1. தக்காளி முகத்தில் உள்ள எண்ணெய் பசையை குறைக்கிறது

முகத்தில் உள்ள எண்ணெய் பசையை குறைக்க தக்காளி மிகவும் சிறந்தது. மேலும் சருமத்தை சுத்தமாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

உங்கள் முகத்தை இளமையாகவும் என்னை பசை இன்றியும் வைத்திருக்க தக்காளியை உடல் முழுவதும் தேய்த்து, 10 நிமிடம் உலர விடுங்கள். பின் சாதாரண/ குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இதை தினமும் செய்தல், சுருக்கங்கள் குறைந்து, முகம் இளமையாக தெரியும்.

2. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்/ துளைகளைக் குறைக்கிறது

சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கும். மேலும் பருக்களினால் உண்டாகும் துளைகளும் முக அழகை கெடுத்துவிடும். இந்த இரு பிரச்சனைகளுக்கும், தக்காளி சிறந்த தீர்வாக அமையும்.

தக்காளியில் உள்ள லைகோபீன்(lycopene) என்ற வேதிப்பொருள், கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தை ஒளிரச் செய்து, உங்களுக்குப் பளபளப்பான சருமத்தையும் தருகிறது.

முகத்தில் உள்ள துளைகள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க ஒரு தக்காளியை பாதியாக வெட்டி, தோல் முழுவதும் தேய்க்க வேண்டும், சாறு துளைகளில் ஊற விடவும். 15 நிமிடங்கள் விட்டுவிட்டு சாதாரண நீரில் கழுவவும்.

இவ்வாறு செய்வது துளைகளை சுருக்கி அதன் தோற்றத்தை கணிசமாகக் குறைக்கும்.

3. முகம் வெள்ளையாக மாற உதவுகிறது.

உங்களின் கருமை நிறத்தை நீக்கி சிகப்பழகு பெற தக்காளி மிகவும் சிறந்தது. முகம் வெள்ளையாக மாற தக்காளி பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • ஒரு தக்காளி போஸ்ட் 2 தேக்கரண்டி
  • முல்தானி மெட்டி 1 தேக்கரண்டி
  • சிறிது புதினா பேஸ்ட்

செய்முறை

  • ஒரு கிண்ணத்தில்  தக்காளி பேஸ்ட் மற்றும் முல்தானி மெட்டி இரண்டையும் நன்றாக கலக்கவும்.
  • இதனுடன் புதினா பேஸ்ட்டை கலந்து முகத்தில் தடவி உலரவிடவும்.
  • பின்பு முகத்தை கழுவவும்.

இப்போது முகம் அழகாகவும் சருமம் பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும் .

4. சூரிய ஒளியினால் உடல் கருமையாவதை தடுக்க தக்காளி பயன்படுத்துங்கள்

கோடையில் சருமத்தில் ஏற்படும் வெப்பத்தை குறைக்க தக்காளி சிறந்தது.

தேவையான பொருட்கள்

  • தேன் 1 தேக்கரண்டி
  • தக்காளி 1

செய்முறை

  • ஒரு தக்காளியை மசித்து அந்த பேஸ்ட்டை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சிறிது தேன் சேர்த்து கலக்கவும்.
  • இதை முகம், கருமை நிறம், மற்றும் கருவளையம் உள்ள இடங்களில் தடவி லேசாக மசாஜ் செய்யவும்.
  • 15 நிமிடங்கள் உலர விடவும், பிறகு கழுவுங்கள்.
  • இதை வாரத்திற்கு 3 முறை செய்யலாம்.

இதை செய்வதால் முகம் கருமை நீங்கி வெள்ளையாக மாறும். கருவளையம் போகும்., சூரியனின் வலுவான புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் வறட்சியும் கருமையும் குறையும்.

5. தக்காளி சருமத்தை இளமையாக வைத்திருக்கும்

சரும  பராமரிப்பு என்று வரும்போது, ​​பெரும்பாலான மக்கள் தக்காளியை தான் பயன்படுத்துகிறார்கள்.

தக்காளி உங்கள் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்திருப்பது மட்டுமல்லாமல், இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாகவைக்க செய்து, இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது.

தேவையான பொருட்கள்

  • 1 வெள்ளரி
  • 1 தக்காளி

செய்முறை

வெள்ளரி மற்றும் தக்காளியின் சாறு எடுத்து, காற்று புகாத ஸ்ப்ரே பாட்டிலில் நன்றாக வடிகட்டி ஊற்றி .ஃப்ரிட்ஜில் வைக்கலாம். இது நான்கு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

நீங்கள் வெளியில் இருந்து வரும்போதெல்லாம் இந்த தக்காளி பேஸ்ட்டை  உங்கள் சருமத்தில் தடவி ஊற வைத்து, சில நிமிடங்களில் கழுவி விடவும். இந்த பேஸ்ட் உங்கள் சருமத்தை இளமையாக மாற்றும்.

6. தக்காளி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

கரும்புள்ளிகள் நீங்க இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். உங்கள் முகம் பளபளக்க இந்த ஃபேஸ் பேக்கை சில வாரங்கள் உபயோகபடுத்த வேண்டும்.

இந்த தக்காளி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் சருமத்தை நச்சுத்தன்மையில் இருந்து காக்குகிறது. குறிப்பாக நாள்பட்ட கரும்புள்ளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் தக்காளி மற்றும் மஞ்சள் பேக் சிறந்தது.

தேவையான பொருட்கள்

  • தேவையான அளவு தக்காளி சாறு
  • 2 தேக்கரண்டி அரிசி மாவு
  • ¼ தேக்கரண்டி மஞ்சள்

செய்முறை

தக்காளி மற்றும் மஞ்சள் பேக் எப்படி தயாரிக்கலாம்?

  • 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் கலக்கவும்.
  • ஒரு பேஸ்ட்டை உருவாக்குவதற்கு தேவையான அளவு தக்காளி சாற்றைச் சேர்த்து, நன்றாக பேஸ்ட் போலே கலக்கவும்.
  • பின்னர் முகத்தில் தடவி மசாஜ் செய்யவும், கரும்புள்ளிகள் அதிகம் காணப்படும் மூக்கு மற்றும் நெற்றியில் கொஞ்சம் அதிகமாக தடவவும்.
  • இந்த ஃபேஸ் பேக் காய்ந்தவுடன், கழுவி விடவும்.
  • இதை வாரம் மூன்று முறை செய்யலாம்.

இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கருமை மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.

7. உடலை குளிர்ச்சியாக்க உதவுகிறது

வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவற்றால் நிறைந்துள்ள தக்காளி, சருமத்திற்கு புத்துணர்ச்சி மற்றும் அழகான தோற்றத்தை தருவது மட்டுமல்லாமல், வெயிலின் தாக்கத்தையும் குறைக்க உதவுகிறது.

தக்காளிச் சாற்றில்  சிறிது மோர் சேர்த்துக் கலந்து, சருமத்தில் தடவினால், உடல் குளிர்ச்சி அடையும்.  உங்களுக்கு வெயிலின் தாக்கம் இருந்தாலும், அது  சருமத்தின் மேற்பரப்பில் உள்ள வெப்பத்தை குறைத்து  வெயிலினால் ஏற்படும் தாக்கத்தையும் குறைக்கிறது.

8. தக்காளி மற்றும் ஓட்ஸ்  ஃபேஸ் பேக்

நம்மில் பெரும்பாலோர்  உடல் எடை குறைய ஓட்ஸ்சை பயன்படுத்துவோம். முகம் பொலிவு பெற  ஓட்ஸ் ஃபேஸ் பேக் அற்புதமான பண்புகளை கொண்டுள்ளது. தக்காளி மற்றும் ஓட்ஸ் பேஸ்ட் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது .மேலும் முகத்தை  மென்மையாகவும் அழகாகவும் மாற்றுகிறது.

தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ்
  • தக்காளி சாறு

செய்முறை

  • மிக்ஸ்சியில் ஓட்ஸை நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் தூளை போட்டு அதில் தேவையான அளவு தக்காளி சாறை ஊற்றி கலக்கவும்.
  • கலந்த இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி உலர விடவும் பின்னர் கழுவி விடவும்.
  • இதை போல் வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம்.

9. கடலை மாவுடன் தக்காளி ஃபேஸ் பேக் (பாசி பருப்பு மாவு )

உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி, இறந்த சரும செல்களை நீக்கி, உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகுறவும் இருக்க செய்கிறது.

தேவையான பொருட்கள்

  • 1 பழுத்த தக்காளி
  • 1 கப் தயிர்
  • ½ ஸ்பூன் தேன்
  • 2 தேக்கரண்டி கடலை மாவு
  • மஞ்சள்

செய்முறை

1 பழுத்த தக்காளி, 1 கப் தயிர், ½ ஸ்பூன் தேன், 2 தேக்கரண்டி உளுந்து மாவு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றை கொண்டு கலந்து முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள்உலர விட்டு கழுவி விடவும்.

இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

10. முகப்பருவுக்கு தக்காளி

முகப்பரு எல்லோருக்குமே பெரிய பிரச்னைதான். முக அழகிற்கு முட்டு கட்டை போடும் இந்த பருக்கள் நீங்கவும் தக்காளி நமக்கு உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  • தக்காளி

செய்முறை

  • தக்காளி சாறை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் முகத்தை கழுவி விடவும்.
  • நல்ல பலனைப் பெற வாரத்திற்கு மூன்று முறை இந்த முறையை  செய்யவும்.

தக்காளி சாறை  முகத்தில் தடவுவதன் மூலம் முக அழகு பெறலாம்.

11. கற்றாழை தக்காளி ஃபேஸ் பேக்

ஜொலிக்கும் அழகான முகத்தை பெறவும், கண்களை சுற்றி உள்ள கருவளையம் நீங்கவும், இந்த கற்றாழை தக்காளி ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.

கற்றாழை  பாதிக்கப்பட்ட பகுதியை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. மேலும் தக்காளியில் வலுவான ப்ளீச்சிங் குணம் உள்ளது, இது சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  • தக்காளி சாறு 1 தேக்கரண்டி
  • கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி

செய்முறை

  • கற்றாழை ஜெல்லுடன் தக்காளி சாறு கலந்து முகத்தில் தடவவும்.
  • 10 நிமிடம் உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
  • இந்த கலவையை தினமும் பயன்படுத்தினால் ஜொலிக்கும் அழகான முகத்தை பெறலாம்.

கண்களுக்குக் கீழே உள்ள கருவளைய பகுதியிலும் இதைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கருவளையம் விரைவில் மறையும்

சில குறிப்புகள்

1) தக்காளியை முகத்தில் தேய்ப்பது நல்லதா?

ஆம், தக்காளியில் அமிலத்தன்மை இருந்தாலும், அது மிகவும் லேசானவை. எனவே சருமத்தில் பயன்படுத்த முற்றிலும் பாதுகாப்பானவை.

2) தக்காளி கரும்புள்ளிகளை நீக்குமா?

லைகோபீன் நிறைந்த தக்காளி, கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தை ஒளிரச் செய்து, உங்களுக்குப் பளபளப்பான சருமத்தையும் தருகிறது.

3) வாரத்திற்கு எத்தனை முறை தக்காளியை முகத்தில் தடவ வேண்டும்?

தக்காளி உங்கள் முகத்தை பொலிவாக்கும், சருமத்தை சுத்தப்படுத்தும். இருப்பினும், அதிகமாக எதையும் பயன்படுத்த வேண்டாம், வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

4) தக்காளியை முகத்தில் எவ்வளவு நேரம் வைத்திருக்க வேண்டும்?

தக்காளி கூழ் மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்கை தோலில் 15-20 நிமிடங்கள் விடுவது பாதுகாப்பானது. இதுவே உங்களுக்கு நல்ல பலனை தரும்.

உங்களுக்காக:

Tomato beauty tips for face in tamil | Tomato for face whitening in tamil | Beauty Tips Using Tomato

தக்காளி உங்கள் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் எவ்வளவு சிறந்தது என்பதை பார்த்தோம். மேலும் அழகான மற்றும் பளபளக்கும் முகத்தை பெற தக்காளியை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்த்தோம் (How to use tomato for skin whitening- Face brightness Tips in Tamil at Home).

உங்கள் சந்தேகங்களை கேழே உள்ள கமெண்டில் பதிவு செய்யுங்கள். தக்காளி அழகு குறிப்புகள் (Tomato beauty tips for face in Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top