பன்னீர் ரோஜா பயன்கள் (பன்னீர் ரோஜாவில் இத்தனை நன்மைகளா?)

பன்னீர் ரோஜா பயன்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ நன்மைகளா என வியப்பீர்கள். அந்த அளவிற்கு மிகவும் பயனுள்ளது. (paneer rose benefits Tamil and Paneer rose benefits for skin in Tamil)

பன்னீர் ரோஜா பூ இதழ்களை சுத்தம் செய்து அப்படியே வெறும் வாயில் மென்று சாப்பிட, வாய் துர்நாற்றம் போகும். வாய் சுவையும் மணமும் பெறும்.

சீதபேதி, வயிற்றுக்கடுப்பு போன்ற பிரச்சனைகளும் குணமாகும். பன்னீர் ரோஜா பூ இதழ்கள் உடலுக்கு குளிர்ச்சியை தருகின்றது. இதனால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

Paneer rose benefits for skin in Tamil

பன்னீர் ரோஜா பயன்கள்

பன்னீர் ரோஜாவின் முக்கியமான பயன்களை பற்றி பார்க்கலாம்.

வயிற்றில் உள்ள வாயுக்களை வெளியேற்றி உடல் குளிர்ச்சி அடைய பன்னீர் ரோஜாவின் உதவுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

மேலும் பன்னீர் ரோஜா பயன்களில் முக்கியமானது, அதன் மலச்சிக்கலை போக்கும் தன்மை.

பன்னீர் ரோஜா பூவை தண்ணீருடன் சேர்த்து சூடாக்கி ஆறியதும் வாய் கொப்பளிக்க ஈறு வீக்கம் வாய் புண் குணமாகும். மேலும் வெளிப்புற புண்களை கழுவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

பன்னீர் பயன்கள்

பன்னீர் ரோஜாபூவில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர், கண் தொடர்பான நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுகின்றது.

கண் சிவந்து எரிச்சலாக இருக்கும் போது ஒரு சில பன்னீர் சொட்டுக்கள் கண்களில் விட்டால் கண் எரிச்சல் குணமாகும்.

பன்னீரில் முகம் கழுவி வந்தால் முகத்திலுள்ள பருக்கள் வடுக்கள் குறையும்.

பன்னீர் ரோஜாவில் உள்ள சத்துக்கள்

பன்னீர் ரோஜாவில் உள்ள வைட்டமின்  சி (Vitamin C) சத்தால் சருமத்தில் இருக்கும் செல்கள் சேதம் அடையாமலும், வேற்குரு வராமலும் இருக்கும். மேலும் வேர்குருவால் ஏற்படும் எரிச்சலையும் தடுகிறது.

பன்னீர் ரோஜாவின் நன்மைகள்

இப்பொழுது பன்னீர் ரோஜாவின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
ரோஜாபூ காதலர்களுக்கு பிடித்த பூ என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ரோஜா பூ அழகையும் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

உடலில் ஏற்படும் எரிச்சலை குறைக்கின்றது. மற்றும் படர்தாமரையால் ஏற்படும் எரிச்சல் பிரச்சனையும் தீர்கின்றது.

உடல் நிறத்தை தக்க வைக்க!!!

பன்னீர் ரோஜா பூ வில் இயற்கையாகவே நம் உடல் நிறத்தை தக்க வைக்கும் ஆற்றல் உள்ளது. இது உடலை பிரகாசிக்க வைக்கவும், பொலிவு பெறவும் செய்கின்றது.

உடல் குளிர்ச்சியாக இருக்க

பன்னீர் ரோஜா எப்போதும் உடலை குளர்ச்சியாக வைக்க உதவுகிறது. மேலும் சருமம் மென்மையாகவும் அழகுறவும் செய்கிறது.

மனதை அமைதி படுத்த

பன்னீர் ரோஜாவின் மணம், உங்கள் மனதை அமைதி படுத்தவும், ஒரு நிலை படுத்தவும் உதவுகிறது.

பன்னீர் ரோஜா அழகு குறிப்புகள்

ரோஜா இதழ்களை பயன்படுத்துவதால் உடலுக்கு, நாள் முழுவதும் புத்துணர்வும் புது பொலிவும் கிடைக்கிறது.

பன்னீர் ரோஜா இதழ்களை வைத்து செய்யக்கூடிய 5 வகையான  அழகு குறிப்புகளை பார்ப்போம்.

1. முகம் பொலிவு பெற

முகம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கவும், ஒரு கிண்ணம் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தம் செய்து தண்ணீரில்  கழுவி வைக்கவும்.

தண்ணீர் வடிந்தவுடன், பன்னீர் ரோஜா இதழ்களை  மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மைபோல் அரைத்து எடுக்கவும்.

பிறகு அந்த பேஸ்ட்டை சுத்தமான கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.  அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால், சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு அந்த கலவையை  முகத்தில் தடவி 10 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.

பிறகு முகத்தை குளிர்ந்த நீரீல்  கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று  முறை செய்து வந்தால் முகம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும்.

2. பருக்கள் போக

முகப்பருக்கள் போக அரைத்த ரோஜா இதழ்களை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தயிரை கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை  முகத்தில் உள்ள பருக்கள்  மீது நன்றாக பூசவும். பின்பு 20 நிமிடங்கள் வைத்திருந்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

இந்த மாதிரி செய்வதினால் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து போகும். இதை  தினமும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3. உதடுகள் சிவப்பு நிறமாக மாற

உங்கள் உதடுகள் சிவப்பு நிறமாக மாற  ஒரு ஸ்பூன் அரைத்த ரோஜா இதழ்களை எடுத்து வடிகட்டி, அதே அளவு தேன் சேர்த்து, நன்கு கலக்கவும்.

பிறகு  இந்த கலவையை உங்கள் உதட்டில் நன்றாக பூச வேண்டும். இவ்வாறு செய்வதினால் உங்கள் உதடு சிவப்பு  நிறமாக மாறும். இந்த முறையை வாரத்திற்கு  இரண்டு அல்லது மூன்று  முறை செய்து வரலாம்.

4. சூரிய கதிர்களால் ஏற்படும் தோல்  பாதிப்புகள் நீங்க

சூரிய கதிர்களால் ஏற்படும் தோல் பாதிப்புகள் நீங்க, ஒரு சுத்தமான கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அரைத்த பன்னீர் ரோஜா இதழ்களை எடுத்து கொள்ள வேண்டும்

அதனுடன் அதே அளவு  கற்றாழை ஜெல்லை கலந்து தோலின் மீது பரவலாக தடவி விட்டு 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இதை  தினமும் செய்து வர தோல்  பளபளப்பாக மாறுவதை நாம் காணலாம்.

5. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க

முகம் பொலிவுடன் இருக்கவும், முகத்தில் உள்ள கருவளையம் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் என்றும் மென்மையாகவும், அழகாகவும் மாற பன்னீர் ரோஜா உதவுகிறது.

ஒரு சுத்தமான கிண்ணத்தில், ஒரு ஸ்பூன் அரைத்த பன்னீர் ரோஜா இதழ் கலவையுடன் ஒரு வைட்டமின் ஈ மாத்திரையை பிழிந்து நன்கு கலந்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை முகத்தில் போட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கருவளையம் கரும்புள்ளி நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும்.

பன்னீர் ரோஜா இதழ் அழகு குறிப்புகள் செய்முறை

1. பன்னீர் ரோஜா இதழ் மற்றும் சந்தனம்

முகத்தில் கறை அல்லது கருமையான புள்ளிகள் மறைய பன்னீர் ரோஜா இதழ் மற்றும் சந்தானம் பேஸ்ட் உதவுகிறது.

கூடுதலாக பன்னீர் ரோஜா மற்றும் சந்தானம் பேஸ்ட்  சருமத்தில் இறந்த செல்களை நீக்கி பொலிவான முகத்தை அடைய செய்கிறது. முகத்தை மிளிர செய்கிறது.

 பன்னீர் ரோஜா இதழ் மற்றும் சந்தானம் பேஸ்ட் எப்படி தயார் செய்வது?

தேவையான பொருட்கள்

  • சுத்தம் செய்த பன்னீர் ரோஜா இதழ்கள்
  • 1 டீஸ்பூன் அரைத்த சந்தானம்
  • 1 டீஸ்பூன் தேன்
  • பன்னீர் சிறிது

செய்முறை

பன்னீர் ரோஜா இதழ்களுடன் சிறிதளவு பன்னீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளுங்கள். இதனுடன் தேன் மற்றும் அரைத்த சந்தனத்தை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வாரம் ஒரு நாள் இதை செய்தாலே போதும், ஒளிரும் முகத்தை பெறலாம். முகத்தில் கறை கரும்புள்ளி காணாமல் போகும்.

2. பன்னீர்  ரோஜா இதழ் + புதினா + முட்டையின் வெள்ளைக்கரு

வறட்சியான முகம் உள்ளவர்களுக்கு, இந்த கலவை மிகவும் உதவும். அதிகமான வறட்சி உடையவர்களுக்கும், சருமம் மென்மை அடைய இந்த கலவை உதவும்.

தேவையான பொருட்கள்

  • பன்னீர் ரோஜா இதழ்கள் 20
  • புதினா இலைகள்
  • 1 முட்டையின் வெள்ளைக்கரு
  • பன்னீர் தேவையான அளவு

செய்முறை

பன்னீர்  ரோஜா இதழ்கள், புதினா, சிறிது பன்னீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளுங்கள். அதனுடன் வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கலந்து  பேஸ்ட் ஆக்கி, முகத்தில் நன்கு பூச வேண்டும்.

பிறகு 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். முகத்தை நன்றாக துடைத்த பின் மாய்சுரைசர் (moisturizer) பயன்படுத்தினால் வறண்ட சருமம் மென்மை அடையும்.

3. பன்னீர்ரோஜா இதழுடன் முல்தானி மிட்டி

முகத்தில் இருக்கும் எண்ணெய் வடித்தலை உறிஞ்சு எடுக்க பன்னீர் ரோஜா இதழ் மற்றும் முல்தானி மிட்டி பேஸ்ட் பயன்படும்.

இந்த பேஸ்ட் சரும துளைகள் உள்ளே சென்று அதிகப்படியான எண்ணெயை வடிதலை  வெளியேற்ற உதவும். இவ்வாறு செய்வதால்  முகப்பருக்கள் வராமல் தடுக்கலாம்.

தேவையான பெருட்கள்

பன்னீர் ரோஜா இதழுடன் முல்தானி மிட்டி பேஸ்ட் செய்ய  தேவையான பெருட்கள்

  • முல்தானி மிட்டி -4 டீஸ்பூன்
  • ரோஜா இதழ் – 15 முதல் 20 வரை
  • பன்னீர் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரைத்த பன்னீர் ரோஜா விழுதை முல்தானி மிட்டியுடன்  சேர்த்து பன்னீர் கலந்து நன்றாக கலக்கவும்.

கலந்த பிறகு இந்த  பேஸ்ட்டை முகத்தில் தடவி 1 5நிமிடங்கலிருந்து  25 நிமிடங்கள் வரை அப்படியே விட வேண்டும். 25 நிமிடங்கள்  கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில்  கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதால் முகத்தில்  எண்ணெய் வடிதலோடு இறந்த செல்களையும் வெளியேற்றிவிடும்.

4. பன்னீர் ரோஜா இதழுடன் பாதம் மற்றும் மஞ்சள்

முகத்தில் கொத்து கொத்தாக வரும் முகப்பருக்கள், தோல் நிறம் மாறுதல் மற்றும் தோல் சிவந்து தடித்தல் பிரச்சனை உள்ளவர்களும்  இந்த பேஸ்ட்டை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

பன்னீர் ரோஜா இதழுடன் பாதாம் மற்றும் மஞ்சள் பேஸ்ட் தயாரிக்க தேவையான பொருட்கள்.

  • ரோஜா இதழ் – 15முதல் 20
  • பாதாம் -4 ஊறவைத்து தோல் உரித்தது
  • மஞ்சள் தூள் – தேவையான  அளவு

செய்முறை

பன்னீர் ரோஜா இதழையும் பாதாமையும் ஒன்றாக சேர்த்து மைபோல நன்கு  அரைத்து கொள்ள வேண்டும். பிறகு மஞ்சள் கலந்து, பேஸ்ட் போல குழைத்து முகத்தில் தடவவும். 25 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்வதால் சருமத்தில் மாறிய நிறத்தை பெறலாம். சருமத்தில்  கொத்து கொத்தாக இருக்கும் முகப்பரு நீங்கும். மேலும் சரும செல்களை புத்துயிர் பெற செய்யும்.

5. பன்னீர் ரோஜா இதழுடன் (கற்றாழை + ஆரஞ்சு சாறு)

அதிக படியான வறட்சி சருமத்தில் இருக்கும் போது சருமத்தில் வெடிப்பு தோன்றி  சருமத்தை சேதமாக்க செய்கிறது.

சருமத்தில் போதுமான எண்ணெய் பசை இல்லாததால் உண்டாகும் இந்த வெடிப்பு பிரச்சனைக்கு பன்னீர் ரோஜா இதழ் பாதாம் மற்றும் மஞ்சள் பேஸ்ட் நல்ல பலன் தரும்.

சருமத்திற்கு தேவையான எண்ணெய் சுரப்பையும் ஈரப்பதத்தையும் அளிக்கும். மேலும் சருமத்தை ஜொலிக்கவும் செய்கிறது.

தேவையான பொருட்கள்

பன்னீர் ரோஜா இதழுடன் கற்றாழை மற்றும் ஆரஞ்சு சாறு பேஸ்ட் தயாரிக்க தேவையான பொருட்கள்.

  • ரோஜா இதழ் – 20முதல் 30 இதழ்கள்
  • கற்றாழை – 4 டீஸ்பூன்
  • பன்னீர் சில துளிகள்
  • ஆரஞ்சு பழச்சாறு – தேவையான அளவு

செய்முறை

பன்னீர் ரோஜா இதழை பன்னீர் சேர்த்து கற்றாழையுடன் மைபோல நன்றாக  அரைக்கவும்.

பிறகு இந்த கலவையில்  ஆரஞ்சு சாறு ஊற்றி  நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்னர்  வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

6. பன்னீர் ரோஜா இதழுடன் தக்காளி

பன்னீர் ரோஜா இதழுடன் தக்காளி பேஸ்ட் செய்ய  தேவையான பொருட்கள்

  • ரோஜா இதழ் – தேவை20முதல் 30 வரை
  • தக்காளி சாறு – தேவையான அளவு
  • பன்னீர்- சில துளிகள்

செய்முறை

பன்னீர் ரோஜா இதழுடன் தக்காளி சாறு சேர்த்து நன்கு அரைத்து சில துளிகள் பன்னீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு இந்த பேஸ்ட்டை  முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ்ட் எல்லாவகையான சரும பிரச்சனைக்கும் தீர்வாகும்

மேலும் சில பயனுள்ள குறிப்புகள்

கண்களில் கருவளையம் இருப்பவர்கள் பன்னீர் ரோஜா இதழ்களுடன் உருளைக்கிழங்கை சேர்த்து அரைத்து பயன்படுத்தினால் கருவளையம் மறையும்.

வேறு எந்த பொருளுமே கிடைக்கவில்லை என்றாலும் பன்னீர்  ரோஜா இதழ்களை மட்டுமே அரைத்து முகத்துக்கு பயன்படுத்தலாம். வறட்சியான முகம் இருப்பவர்கள் பன்னீர் ரோஜா இதழ்களுடன் வெண்ணெய் சேர்த்து  பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சாத பால் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

பன்னீர் ரோஜா இதழ்களுடன் பால் சேர்த்து பற்று போட்டால் முகம் மேலும் மென்மையாக  இருக்கும்.

பன்னீர் ரோஜா பூ சுவை

பன்னீர் ரோஜா பூ சுவை லேசான துவர்ப்பு சுவை உடையது.

பன்னீர் ரோஜா பூ வில் எப்படி பன்னீர் தயாரிக்கின்றனர்?

நன்கு சுத்தம் செய்யப்பட்ட பன்னீர் ரோஜா பூ இதழ்கள் ஒரு கிலோ (1 Kg) எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் மூன்று லிட்டர் தண்ணீர் சேர்த்து பெரிய பாத்திரத்தில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும்.

தண்ணீர் அளவு பாதி வந்தவுடன் இறக்கி வடிகட்டி கொள்ள வேண்டும். இவ்வாறு காய்ச்சும்  நீரே பன்னீராகும்.

மேலும் சில குறிப்புகள்

இறுதியாக,

பன்னீர் ரோஜா பயன்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ நன்மைகளா என வியப்பீர்கள். அந்த அளவிற்கு மிகவும் பயனுள்ளது. (paneer rose benefits Tamil and Paneer rose benefits for skin in Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top