கருஞ்சீரக எண்ணெய் பயன்கள் என்ன? Black Seed Oil Cumin Benefits Tamil

கருஞ்சீரக எண்ணெய் பயன்கள்: கருஞ்சீரக எண்ணெய் நமக்கு புதியது அல்ல. ஆனால் எடை குறைப்பு முதல் மூட்டு வலியை தணிக்கும் வரை அனைத்திற்கும் ஒரு சிறந்த நிவாரணமாக உள்ளது என்று பலருக்கும் தெரியாது.

கருஞ்சீரக எண்ணெயில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் ஒரு சிலரே உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருந்தாக எடுத்துக்கொள்கின்றனர். கருஞ்சீரக எண்ணெய்யின் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி (karunjeeragam oil uses in tamil) இந்த பதிவில்  தெரிந்து கொள்வோம்.

கருஞ்சீரக எண்ணெயில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (anti-oxidants) உள்ளன. அதனால் இந்த கருஞ்சீரக எண்ணெய் நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இது பாதுகாப்பனதா?

கருஞ்சீரகம் எண்ணெய் பயன்கள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் கருஞ்சீரகம் மற்றும் அவற்றின் எண்ணெயை பலவிதமான நோய்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

சக்திவாய்ந்த மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற, இந்த கருஞ்சீரக எண்ணெய் ஒரு இயற்கை வரமாகும்.

கருஞ்சீரக எண்ணெய் எந்தெந்த பிரச்சனைகளுக்கு பயன் தருகிறது?

  • ஆஸ்துமா
  • நீரிழிவு நோய்
  • உயர் இரத்த அழுத்தம் (High BP)
  • எடை குறைப்பு
  • தலைவலி
  • முதுகு வலி
  • தொற்றுகள்
  • வீக்கம்

இன்று, கருஞ்சீரக எண்ணெய் நாட்டு மருந்து கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் ஆன்லைனில் திரவ எண்ணெயாகவும், ஜெல் காப்ஸ்யூல்களாகவும் விற்கப்படுகிறது. அதன் பல்வேறு நன்மைகளைப் பெற, நீங்கள் அதை உட்கொள்ளலாம் அல்லது தோலில் மேல்புறமாகப் பயன்படுத்தலாம்.

கருஞ்சீரக எண்ணெய் பயன்கள்

கருஞ்சீரக எண்ணெய்யில் என்னென்ன பயன்கள் உள்ளது என விரிவாக பார்க்கலாம்.

1. முகப்பருவை குறைக்கலாம்

முகப்பரு போன்ற தோல் நோய்களுக்கு  கருஞ்சீரக எண்ணெய் பயனுள்ளதாக இருக்கின்றது. முகப்பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெற, இந்த எண்ணையை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம்.

கருஞ்சீரக எண்ணெய் மற்றும் ஆரஞ்சுபழச்சாறு செய்யும் அற்புதம்

கருஞ்சராக எண்ணெய் மற்றும் ஆரஞ்சு சாறு ஆகியவை உங்கள் அழகை அதிகரிக்க செய்யும். முகத்தில் உள்ள துளைகளை அழிக்கவும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கவும் உதவுகின்றன.

உங்கள் சருமம் மிருதுவாக மாற, இந்த கலவையை (கருஞ்சராக எண்ணெய் மற்றும் ஆரஞ்சு சாறு) முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும்.

வைட்டமின் சி உள்ளதால்  ஃப்ரீ ரேடிக்கல்களுடன்(Free Radicals) போராடி சருமத்திற்கு உடனடி பிரகாசத்தை வழங்குகிறது.

தேவையான பொருட்கள்:

  • ½ தேக்கரண்டி கருஞ்சீரகஎண்ணெய்
  • 1 கப் ஆரஞ்சுபழ  சாறு

செய்முறை:

ஆரஞ்சுபழச் சாறுடன் கருஞ்சீரக எண்ணெயைக் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர, நச்சுகள் வெளியேறி, ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உங்கள் சருமத்தை பொலிவாக்கும். முகப்பருவும் நீங்கும்.

இந்த சாற்றை காலையில் அல்லது இரவில் குடிக்கலாம். ஒரு வாரத்தில் சருமம் பொலிவு பெரும்.

2. சொரியாசிஸ்க்கு சிகிச்சையளிக்க உதவும்

கருஞ்சீரக எண்ணெய் தடிப்புத் தோல் அழற்சியின் (சொரியாசிஸ்) சிகிச்சையில் உதவும். கருஞ்சீரக எண்ணெயை தோலில் தடவுவது வீக்கம் மற்றும் தடிப்புத் தோல் அழற்சியின் அறிகுறிகளைக் குறைக்கும்.

3. காயம் விரைவில் குணமடைய

கருஞ்சீரக எண்ணெயில் தைமோகுவினோன் (Thymoquinone) என்ற வேதிப்பொருள்  உள்ளது. இது திசு வளர்ச்சியைத் தூண்டி காயத்தை குணப்படுத்தும்.

கருஞ்சீரக எண்ணெய் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மையால் தீக்காயங்கள், வெட்டுக்கள் மற்றும் நீரிழிவு காயங்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்.

4. முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

கருஞ்சீரக எண்ணெய் முடி வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் முடி உதிர்வை குறைக்கும் ஆற்றல் கொண்டது.

கருஞ்சீரக  எண்ணெய்  உச்சந்தலையில் வழுக்கை விழாமல் முடி உதிர்வை தடுக்கின்றது. தலை முடியின் பளபளப்பு மற்றும் வலிமையை மேம்படுத்த கருஞ்சீரக எண்ணெய் சிறந்தது.

கருஞ்சீரக எண்ணெயில் ஆண்டிமைக்ரோபியல் (Anti-microbial) பண்புகள் உள்ளன. இது முடிஉதிர்வை கட்டுப்படுத்தும். எனவே கருஞ்சீரக எண்ணெய் பெரும்பாலும் முடி பராமரிப்பு பொருட்களில் சேர்க்கப்படுகிறது, நீங்கள் ஹேர் மாஸ்க்குகள் மற்றும் ஷாம்புவில் இதை நீங்கள் பார்க்கலாம்.

கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக்:

தேவையான பொருட்கள்:

  • 1 தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெய்
  • 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்

செய்முறை:

  • இரண்டு எண்ணெய்களையும் சமமாக கலந்து சூடாக்கி, உச்சந்தலையில் தேய்க்கவும்.
  • 30 நிமிடம் விட்டு, லேசான ஷாம்பு கொண்டு கழுவவும்.

எப்படி இது செயல்படுகிறது:

தேங்காய் எண்ணெய் உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் பட்டுப் போலவும் ஆக்குகிறது, அதேசமயம் கருஞ்சீரக எண்ணெய் முடி வளர்ச்சியை அதிகரிக்கின்றது   பொடுகுகளை நீக்குகிறது. மற்றும் உச்சந்தலையை சுத்தமாக பராமரிக்க உதவுகின்றது.

கருஞ்சீரக எண்ணெய்  மற்றும் விளக்கெண்ணெய் பேக்:

தேவையான பொருட்கள்:

  • 1 தேக்கரண்டி கருஞ்சீரகஎண்ணெய்
  • 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய்

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில், இரண்டு  எண்ணெய்களையும் கலந்துகொள்ளுங்கள்.
  • சிறிது சூடாக்கி வெதுவெதுப்பான சூட்டில் , முடிவேர்கால் முதல் நுனி வரை உச்சந்தலையில் நன்றாக தேய்த்து விடவும்.
  • 30 நிமிடங்கள் அப்படியே வைத்து, லேசான ஷாம்பு கொண்டு கழுவவும்.

கருஞ்சீரக எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இயற்கை அன்னையின் அற்புதமான பொருட்கள். இந்த இரண்டு பொருட்களிலும் வைட்டமின் ஈ, தாதுக்கள், புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. அவை முடி உதிர்வதைக் கட்டுப்படுத்துவதோடு, முடி வளர்ச்சியை வேகப்படுத்துகிறது .

5. செரிமானத்தை சீராக்குகிறது

பழமையான பாரம்பரிய பயன்பாடுகளில் ஒன்றான கருஞ்சிரக எண்ணெய், ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

அஜீரணம், வீக்கம், பசியின்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றிற்கு அடிக்கடி பயன்படுத்தப்படும் சிறந்த நிவாரணியாக கருஞ்சிரக எண்ணெய் விளங்குகிறது.

6. வீக்கத்தைக் குறைக்கிறது

கருஞ்சீரக எண்ணெய் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

கருஞ்சீரக எண்ணெய் சர்க்கரைநோய், இரண்டாம் நிலை இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பல நாள்பட்ட நோய்களுக்கு பயன்னுள்ளதாக உள்ளது.

கருஞ்சீரகம் மற்றும் கருஞ்சீரக எண்ணெய் ஆகியவை அழற்சியினை குறைக்கவும்  இது நாள்பட்ட நோயிலிருந்து பாதுகாக்கவும்  உதவுகின்றது.

7. உடல் எடை குறைய

கருஞ்சீரக எண்ணெய் உடல்எடை குறைய பெரிதும் உதவுகின்றது. மேலும் பசியைக் குறைக்கவும், உடல் கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.

8. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

நீண்ட காலத்திற்குத் சரிசெய்யாமல் விட்டால், அதிக இரத்தச் சர்க்கரையானது நரம்பு பாதிப்பு, பார்வை மாற்றங்கள் மற்றும் காயம் மெதுவாக குணமடைதல் போன்ற இன்னும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்க கருஞ்சீரக எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும்.

9. முடக்கு வாத சிகிச்சை

கருஞ்சீரக எண்ணெய் இரண்டு மூட்டுகளுக்கு இடையே உள்ள ஜவ்வின் அளவை அதிகரிப்பதன் மூலம், முடக்கு வாதம் காரணமாக ஏற்படும் வலியை குறைக்கின்றது.

இந்த ஜவ்வு அதிகமாக இருக்கும் வரை எலும்புகள் உராயும் போதும் மூட்டுகள் அசையும் போதும் எந்தவிதமான வலியும் உண்டாகாது.

கருஞ்சீரக எண்ணெய் சாப்பிடுவதால் இரத்த அழற்சியைக்  குறைந்து, மூட்டுகளில் உள்ள வீக்கம் குறைகின்றது

10. அலர்ஜி பிரச்சனைகள்

கருஞ்சீரக எண்ணெய் அலர்ஜியால் பாதிக்கப்பட்டவரின் எதிர்மறை அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. கருஞ்சீரகஎண்ணெய்யில் உள்ள “தைமோகுவினோன்” என்னும் வேதிப்பொருள், ஒரு சிறந்த வலி நிவாரணி. மேலும் இது உடலில் உள்ள நச்சுகளை சுத்தம் செய்ய உதவுகிறது.

தொடர்ந்து சளி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுத்தும் கடுமையான அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்தால், ஒரு ஸ்பூன் கருஞ்சீரக  எண்ணெய் சாப்பிட்டால் போதுமானது.

மூக்கு ஒழுகுதல் மற்றும் தும்மல் வராமல் இருக்க வெதுவெதுப்பான எண்ணெயை மார்பில் தேய்க்கலாம்.

இந்த அளவு முக்கியத்துவமான கருஞ்சீரக எண்ணெய், நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை கொல்லும். எனவே குடற்புழு நீக்கத்தில் இந்த எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது.

11. ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும்

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருஞ்சீரக எண்ணெய் அதிசயங்களைச் செய்கிறது. கருஞ்சீரக எண்ணெயை உட்கொள்வதால் ஆஸ்துமா கட்டுக்குள் இருக்கும்.

12. நல்ல தூக்கத்திற்கு உதவும் கருஞ்சீரக எண்ணெய்

கருஞ்சீரக எண்ணெய் இயற்கையான நல்ல தூக்கத்தை தருகின்றது.தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தென் கலந்த பாலை பருகினால், விரைவில் தூக்கம் வரும்.

சூடான பாலில் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ளுங்கள். நன்றாக கலங்கி குடிக்கவும். karunjeeragam oil uses in tamil

கூடுதல் தகவல்

கருஞ்சீரக எண்ணெய்யின் நன்மைகள் மகத்தானவை. கருஞ்சீரக எண்ணெய் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டோம்.

எடை பராமரிப்பில் இருந்து மூட்டு வலியை தணிக்கும் வரை அனைத்திற்கும் ஒரு நிவாரணமாக சமீப காலமாக இருந்து வருகிறது. கருஞ்சீரக எண்ணெய்யில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top