வாயை சுற்றியுள்ள கருமை நீங்க 10 எளிய வழிகள்

வாயை சுற்றியுள்ள கருமை நீங்க என்ன செய்ய வேண்டும்? சில பெண்களுக்கு வாயை சுற்றியுள்ள கருமை நிறம், முக அழகை கெடுக்கும். சிலருக்கு வாயை சுற்றியும், சிலருக்கு உதட்டின் மேலும் இந்த கருமை நிறம் இருக்கும்.

வீட்டிலேயே மிக எளிதாக நீங்கள் இந்த கருமை நிறத்தை போக்கலாம். வாயை சுற்றி கருப்பு படலம் உண்டாக பல காரணங்கள் (மெலனின், ஹார்மோன் சமநிலை இல்லாமை) இருந்தாலும், நீங்கள் அதை எளிதாக போக்கலாம்.

வாயை சுற்றியுள்ள கருமை நீங்க, கண்டிப்பாக நீங்கள் செய்ய வேண்டிய இயற்கை வழிகளை இப்போது பார்க்கலாம்.

வாயை சுற்றியுள்ள கருமை நீங்க

வாயை சுற்றியுள்ள கருமை நீங்க

கிழே உள்ள இயற்கை வழிகளை பின்பற்றி நீங்கள், வாயை சுற்றியுள்ள கருமையை போக்கி பளபளப்பான முகத்தை பெறலாம்.

1. எலுமிச்சை

எலுமிச்சை பழ சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் கருமையான சரும செல்கள் ஏற்படுவதை தடுத்து, கருமையான திட்டுகளை போக்குகிறது. எலுமிச்சை பழ சாறு உங்கள் சருமத்தை நன்கு சுத்தம் செய்து, வாயை சுற்றியுள்ள கருமையை போக்கி உங்கள் முகத்தை அழகாக்குகிறது.

எப்படி பயன்படுத்துவது?

  • எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை எடுத்து, உங்கள் வாய் பகுதியில் சுமார் 10-15 நிமிடங்கள் மெதுவாக தேய்க்கவும்.
  • பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

ஒருநாள் விட்டு ஒருநாள் என, வாரம் 3-4 முறை நீங்கள் பயன்படுத்தலாம்.

2. ஓட்ஸ் ஸ்க்ரப்

இயற்கையாகவே உங்கள் சருமத்தை வெள்ளையாகவும் பளபளப்பாகவும் மாற்றும் சக்தி கொண்டது ஓட்ஸ்.

இது வாயை சுற்றியுள்ள இறந்த சரும செல்களையும், அதில் படிந்துள்ள அழுக்குகளையும் நீக்குகிறது. இதன் மூலம் கருப்பு நிறம் குறைந்து பளபளப்பான சருமத்தை பெற ஓட்ஸ் உதவுகிறது.

எப்படி பயன்படுத்துவது?
ஓட்ஸ் ஸ்க்ரப் தயாரிக்க தேவையான போட்ருட்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ் அரை கப்
  • 1 முழு தக்காளி சாறு
  • சிறிது ஆலிவ் எண்ணெய்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் அரை கப் ஓட்ஸ், தக்காளி சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • வாயை சுற்றியுள்ள கருமை நீங்க, இக்கலவையை உங்கள் வாயை சுற்றி தடவி சிறிது நேரம் (15 நிமிடம்) மென்மையாக தேய்க்கவும்.
  • பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

நீங்கள் தினமும் ஒரு முறை ஓட்ஸ் ஸ்க்ரப் பயன்படுத்தலாம்.

3. வாயை சுற்றியுள்ள கருமை நீங்க பப்பாளி

பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. உங்கள் வாயைச் சுற்றியுள்ள கருமையான பகுதிகளை வெள்ளையாகவும், உங்கள் தோல் நிறத்தை சமமாக மாற்றவும் பப்பாளி உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  • பப்பாளி பழ துண்டுகள் அரை கப்
  • ரோஸ் வாட்டர் சிறிது

செய்முறை

  • பப்பாளி பழ துண்டுகள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டாக கலக்கவும்.
  • கலந்த இந்த பேஸ்ட்டை வாயை சுற்றியுள்ள கருமை நிறத்தில் தடவி 30 நிமிடங்கள் உலர விடவும்.
  • பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி துடைக்கவும்.

வாரத்திற்கு 2-3 முறை இதை செய்யலாம்.

4. உருளை கிழங்கு

வாயை சுற்றியுள்ள கருமை நீங்க உருளைக்கிழங்கு ஒரு சிறந்த தீர்வு! இயற்கையாகவே உருளைக்கிழங்கில் உள்ள வேதிப்பொருட்கள், சருமத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. இதனால் அழுக்கை நீக்கி கரும் படலத்தையும் போக்குகிறது.

தேவையான பொருட்கள்

  • நடுத்தர அளவிலான உருளைக்கிழங்கு

செய்முறை

  • உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி, வட்ட வடிவத்தில் உங்கள் வாயைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம், வாயைச் சுற்றியுள்ள கருமையான நிறம் மற்றும் கருமையான திட்டுக்கள் மறையும்.
  • 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
  • பின் தண்ணீரில் கழுவவும்.

இதை தினமும் செய்து வந்தால், வாயை சுற்றி உள்ள கருமை நீங்கும்.

5. மஞ்சள்

இயற்கையாகவே மஞ்சளை முக அழகுக்காகவும், வெள்ளை நிறத்துக்கவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். மஞ்சளில் உள்ள சத்துக்கள் வாயை சுற்றியுள்ள கருமை நீங்கவும், முக சுருக்கங்கள் வராமல் தடுக்கவும் செய்கிறது.

தேவையான பொருட்கள்

  • மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
  • ரோஸ் வாட்டர் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, உங்கள் வாயைச் சுற்றியுள்ள கருமையான திட்டுகள் மீது தடவி உலர விடவும்.
  • உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுவம்.

இதை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம்.

6. வாயை சுற்றியுள்ள கருமை நீங்க பால்

பெரும்பலான மக்கள் முகத்தை வெள்ளையாக்க, பாலை பயன்படுத்துகிறார்கள். பல அழகு சாதான பொருட்களிலும் பால் சேர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.

பாலில் உள்ள லாக்டிக் அமிலம் (lactic acid) சருமத்தில் கருமை நிறத்தை குறைக்கும். எனவே வாயை சுற்றியுள்ள கருமை நீங்க நீங்கள் பாலை கண்டிபாகே பயன்படுத்தலாம்.

மோர் கூட உங்கள் சருமத்தை வெள்ளையாக்க செய்யும்.

செய்முறை

  • ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி கொள்ளுங்கள்.
  • பருத்தி துணி/ பஞ்சு எடுத்து பாலில் நனைத்து, உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வாயை சுற்றியுள்ள கருமை மீது மிதமாக தேய்க்கவும்.
    பின்னர் 20 நிமிடங்கள் உலர விடவும்.
  • பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

ஒரு நாளைக்கு 1-2 முறை, நீங்கள் பாலை முகத்தில் பயன்படுத்தலாம்.

7. கற்றாழை ஜெல்

கற்றாழையில் உள்ள முக்கியமான வேதிப்பொருள்கள் அலோயின் மற்றும் அலோசின் (aloin and aloesin), இவை இரண்டும் சருமத்தை வெள்ளையாக்கும் தன்மை கொண்டு உள்ளன.

இந்த வேதிப்பொருள்கள் மெலனின் செல்களை அழித்து வாயை சுற்றியுள்ள கருமை நிறத்தை போக்கி மேலும் கருமை நிறம் வராமல் தடுக்கிறது.

எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் கடையில் வாங்கும் ஜெல்லைப் பயன்படுத்தலாம் அல்லது வீட்டில் உள்ள கற்றாழை செடியிலிருந்து ஜெல்லை நீங்களே பிரித்தெடுத்து பயன்படுத்தலாம்.

செய்முறை

  • கற்றாழை ஜெல்லை வாயை சுற்றி கருமை உள்ள பகுதிகளில் தடவுங்கள்.
  • 15-20 நிமிடங்கள் அப்படியே உலர விடுங்கள்.
  • பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை, நீங்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில்  பயன்படுத்தலாம்.

8. வாயை சுற்றியுள்ள கருமை நீங்க வெங்காயம்

வெங்காயம் பலருக்கு எரிச்சலை உண்டாக்கி கணீர் வர வைக்கும். அதே வேளையில், வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆற்றலையும் அதிகரிக்கும்.

சருமத்தை வெள்ளையாக்கும் தன்மை கொண்டது வெங்காய சாறு.
வாயை சுற்றி உள்ள கருமை நிறம் போக, வெங்காய சாற்றை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?

  • வெங்காயத்தை நன்றாக அரைத்து அதன் சாற்றை பிழிந்து கொள்ளுங்கள்.
  • அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
  • பின் பருத்தி துணியால்/ பஞ்சால் சாற்றை நனைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலரவிடவும்.
  • பிறகு குளிர்ந்த நீரில் கழுவி துடைக்கவும்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை நீங்கள் இந்த முறையை பின்பற்றலாம்.

9. சந்தனம்

தோல் பாதுகாப்புக்கான மிகவும் முக்கியமான பொருட்களில் ஒன்றாக சந்தனம் உள்ளது. உங்கள் முகத்தில் உள்ள புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்க சந்தனம் மிகவும் பயனுள்ளது.

சந்தனம் உங்கள் முகத்திற்கு அழகான, இயற்கையான பொலிவை தருகிறது.

பயன்படுத்தும் முறை

  • சந்தன பொடியில் சிறிது பாலை கலந்து, கெட்டியான பேஸ்ட் ஆக மாற்றவும்.
  • அந்த பேஸ்டை முகத்தில் தடவி, 20-30 நிமிடம் உலர விடவும்.
  • பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

தினமும் இதை உங்கள் முகத்தில் பயன்படுத்தினால் வாயை சுற்றியுள்ள கருமை விரைவாக மறையும். மேலும் முகத்திற்கு புது பொலிவு கிடைக்கும்.

10. கிரீன் டீ

உடல் மற்றும் சருமத்திற்கு கிரீன் டீயின் நன்மைகள் பற்றி நீங்கள் நிறைய படித்திருக்கலாம். இருப்பினும், பலருக்கும் தெரியாதது என்னவென்றால், வீட்டிலேயே கருமைகளை அகற்றுவதற்கான தீர்வுகளில் கிரீன் டீயும் ஒன்றாகும்.

கிரீன் டீ, சருமத்தை வெள்ளையாக்கும், கரும்புள்ளி, வாயை சுற்றியுள்ள கருமைகளைக் குறைத்து, உங்களுக்கு பளபளப்பான சருமத்தைத் தருகிறது.

எப்படி பயன்படுத்துவது?

  • கிரீன் டீ இலையில் வெந்நீரை ஊற்றி, அதை ஆற விடவும்.
  • ஆறிய பின் ஒரு பஞ்சு/ காட்டன் துணியை பயன்படுத்தி கிரீன் டீயை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய விடவும்.
  • காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவவும்.

வாரத்திற்கு 1-2 முறை, இதை நீங்கள் பயன்படுத்தலாம். வாயை சுற்றியுள்ள கருமை நீங்கி பளபளப்பான வெண்மை நிறத்தை பெறலாம்.

வாயை சுற்றியுள்ள கருமை வர காரணங்கள் என்ன?

வாயை சுற்றியுள்ள கருமை நிறம் முழு உடலையும் பாதிக்கலாம் அல்லது வெவ்வேறு பகுதிகளில் சிறிய கருப்பு திட்டுகள் ஏற்படலாம்.

முகத்தில் கருமை நிறம் வரும்போது, ​​அதைச் சமாளிப்பது வெறுப்பாக இருக்கும். தோலில் கருப்பு திட்டுகள் மற்றும் நிறமாற்றம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது, சில பொதுவான காரணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • அதிகப்படியாக உற்பத்தியாகும் மெலனின்
  • கீமோதெரபி மருந்துகளின் பக்கவிளைவுகள்
  • தோல்(அலர்ஜி) / ஒவ்வாமை
  • அதிகப்படியான சூரியஒளி உடலில் படுவது.
  • அட்ரீனல் சுரப்பிகள் (Adrenal Glands) போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாதது.

வாயை சுற்றியுள்ள கருமை நீங்க சில குறிப்புகளை பார்த்தோம். முகத்தை வெள்ளையாக்கும் வழிகள், உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க வீட்டிலேயே செய்யும் எளிய வழிகளை பார்த்தோம். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top