மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்

மாதவிடாய் சீராக என்ன செய்ய வேண்டும்? மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம் என்ன? (mathavidai kolaru neenga | mathavidai problem nattu maruthuvam tamil)

முதலில் மாதவிடாய் கோளாறு என்பது கவலைப்படக் கூடிய ஒன்று அல்ல. நீங்கள் வீட்டிலேயே எளிதாக மாதவிடாய் கோளாறை சீராக்கலாம்.

முதலில் இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் வர முக்கிய காரணம் என்ன என்று கண்டறியுங்கள். பின்னர் அதை சரி செய்தால், அனைத்தும் சீராகிவிடும்.

சரி.. மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம் பற்றி பார்க்கும் முன் மாதவிடாய் கோளாறின் அறிகுறிகளையும், காரணங்களையும் பார்க்கலாம்.

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்

ஒழுங்கற்ற மாதவிடாய் என்றால் என்ன?

வழக்கமான மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை நிகழ்கிறது மற்றும் தோராயமாக 4-6 நாட்கள் வரை நீடிக்கும்.

35 நாட்களுக்குப் பிறகும் தொடங்காவிட்டாலோ அல்லது ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நாட்களின் இடைவெளியில் ஏற்பட்டாலோ, ஒரு காலகட்டம் ஒழுங்கற்றதாக இருக்கும்.

உங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கற்றதா என்பதை எப்படி அறிவது?

கால அளவு உங்கள் மாதவிடாய் நீண்ட அல்லது குறுகிய காலத்திற்குப் பிறகு முடிவடைகிறதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்
ஓட்டம் உங்கள் மாதவிடாய் ஓட்டத்தைக் கண்காணித்து, அது இயல்பை விட கனமானதா அல்லது இலகுவானதா என்பதைப் பார்க்கவும். நீங்கள் எவ்வளவு அடிக்கடி சானிட்டரி பேட்களை மாற்ற வேண்டும் என்பதையும் கண்காணிக்கலாம்.
இரத்தப்போக்கு உங்கள் சாதாரண மாதவிடாய்க்கு வெளியே இரத்தப்போக்கு உள்ளதா?
வலி நீங்கள் வழக்கத்தை விட அதிக வலியை அனுபவிக்கிறீர்களா? அல்லது குறைவாக? நீங்கள் வழக்கமாக எதிர்பார்ப்பதை விட வலி வேறுபட்டதா?

ஒழுங்கற்ற மாதவிடாய் அறிகுறிகள் என்ன?

  • மாதவிடாய் சுழற்சியின் நீளம் 35 நாட்களுக்கு மேல் நீட்டிக்கப்படுகிறது.
  • 3 க்கும் மேற்பட்ட தொடர்ச்சியான சுழற்சிகள் நிகழவில்லை.
  • கட்டிகள் அல்லது புள்ளிகளுடன் கூடிய கடுமையான இரத்தப்போக்கு.
  • வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் முதுகுவலி.

ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

  • ஹார்மோன் சமநிலையின்மை.
  • கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துதல்.
  • உடல் பருமன்.
  • வாழ்க்கை முறை மாற்றங்கள் (உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்).
  • மன அழுத்தம்.
  • மருந்து, அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க அயோடின் சிகிச்சை போன்ற தைராய்டு கோளாறுகள்.

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்

1. மலைவேம்பு

மலைவேம்பு பல நோய்களை தீர்க்கும் ஒரு அற்புத மூலிகை. இதன் காய், கனி, பூ, இலை, வேர், பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது.

சரி இப்பொழுது மலைவேம்பை எப்படி பயன்படுத்தி மாதவிடாய்
கோளாறை குணமாக்காலம் என்று பாப்போம்.

தேவையான பொருட்கள்:

  • சிறிதளவு மலைவேம்பு இலைகள்.

செய்முறை:

  • மலைவேம்பு இலைகளை மிக்ஸி அல்லது அம்மியில் நன்றாக அரைத்து கொள்ளுங்கள். (அரைக்கும் பொழுது கண்டிப்பாக தண்ணீர் சேர்க்கக்கூடாது)
  • நன்றாக பேஸ்ட் போல் அரைத்த பின், அதை உருண்டையாக (நெல்லிக்காய் அளவு) பிடித்துக்கொள்ளுங்கள்.
  • காலை வெறும் வயிற்றில் இந்த மலைவேம்பு உருண்டையை சாப்பிட வேண்டும்.
  • இந்த மலைவேம்பு உருண்டையை சாப்பிட்டபின் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கக்கூடாது. மேலும் ஒரு மணிநேரம் வேறு எந்த உணவும் சாப்பிட கூடாது.
  • மாதவிடாய் ஆரம்பித்த நாள் முதல் சாப்பிட தொடங்குங்கள். 3-4 நாட்கள் சாப்பிட்டால் போதுமானது. அதிக நாட்களோ அல்லது அதிக உருண்டையோ எடுத்து கொள்ள வேண்டாம்.

மலைவேம்பு எப்படி மாதவிடாய் கோளாறை சீராக்கும்?

மலைவேம்பு கருப்பையை சுத்தம் செய்யும். இதன்மூலம் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். மேலும் அதிகப்படியான உதிரப்போக்கு, வலி, முதலிய மாதவிலக்கு நாளில் உண்டாகும் பிரச்சனைகளையும் தீர்க்கும்.

கர்ப்பப்பையில் இருக்கும் தொற்றுகிருமிகளை அழிக்கும். மேலும் பலருக்கு கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் இருக்கும். அதையும் இந்த மலைவேம்பு சரிசெய்யும்.

கருமுட்டை வளர்ச்சியின்மை, கருமுட்டை குறைபாடு போன்ற பிரச்சனைகளை சரிசெய்து, வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதன்மூலம் மலட்டுத்தன்மையும் நீங்கும். மாதவிடாயை ஒழுங்காக்குவதோடு கர்ப்பப்பை கோளாறுகளையும் சீராக்கும். நிச்சயமாக மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம் மலைவேம்பு தான்.

2. கருப்பு எள் 

கருப்பு எள், மாதவிடாய் கோளாறை குணமாக்கும் மற்றொரு சிறந்த மூலிகை. இது உங்கள் உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தி மாதவிடாயை சீராக்கும்.

மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் வர முக்கிய காரணமான, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. இதன் மூலம் மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளும் சரியாகும்.

மாதவிடாய் சீராக எள்ளை எவ்வாறு பயன்படுத்துவது?

  • கருப்பு எள்ளை நன்றாக அரைத்து, சிறிது வெல்லம் சேர்த்து உருண்டையாக பிடித்து கொள்ளுங்கள். இந்த எள் உருண்டையை வாரம் மூன்று முறை (ஒரு முறைக்கு 2 உருண்டை) சாப்பிட்டால், மாதவிடாய் கோளாறை குணமாக்கும். இதை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
  • கருப்பு எள்ளை 1 மணிநேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். பின் அந்த தண்ணீரை தினமும் (அரை டம்ளர் அளவு) குடிக்கலாம். மாதவிடாய் சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும்..
  • ஒரு தேக்கரண்டி வறுத்த எள்ளை தேநீருடன் சேர்த்து, ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்ளலாம்.

3. இஞ்சி

ஒழுங்கற்ற மாதவிடாய் உட்பட பல்வேறு நோய்கள் மற்றும் அறிகுறிகளுக்கு இஞ்சி நன்மை பயக்கும். பச்சையான இஞ்சியை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் மாதவிடாயை சீராக்க உதவும்.

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது கருப்பை தசைகளை சுருக்கவும், ஹார்மோன் சமநிலையை எளிதாக்கவும் உதவுகிறது. இது மாதவிடாய் மாதாந்திர நிகழ்வை ஒழுங்குபடுத்துகிறது.

ஒரு கிளாஸ் சூடான இஞ்சி டீயுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ஒரு துளி தேன் சேர்த்து காலை அல்லது மாலை வெறும் வயிற்றில் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

4. பப்பாளி காய்

ஒழுங்கற்ற மாதவிடாய் சீராக, நீங்கள் பப்பாளி காயை பயன்படுத்தலாம். இது மாதவிடாய் காலத்தில் ஏற்படும், கருப்பைச் சுருக்கத்தை அதிகரிக்கிறது, அதனால் மாதவிடாய் கால பிரச்சனைகள் சரியாகும்.

பப்பாளி காய் சாற்றை சில மாதங்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளுங்கள், ஆனால் உங்கள் மாதவிடாய் காலத்தில் இதை குடிக்க வேண்டாம்.

5. மஞ்சள்

மஞ்சளால் எதையும் செய்ய முடியும். இது எந்த நிலையிலும் நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம்.

இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டுள்ளது, இது கருப்பை பிடிப்பைக் குறைக்க உதவுகிறது.

இயற்கையாகவே மாதவிடாய் வருவதற்கு நீங்கள் விரும்பினால், வெதுவெதுப்பான பால் மற்றும் தேனுடன் மஞ்சளை சாப்பிட முயற்சிக்கவும். மாதவிடாய் வரும் வரை தினமும் சாப்பிடுங்கள்.

6. வெல்லம்

வெல்லத்தில் இனிப்பு மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம். வெல்லத்தை தவறாமல் உட்கொள்வது ஒழுங்கற்ற மாதவிடாய்களை சீராக்க உதவும். இது கருப்பை பிடிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

7. கற்றாழை

கற்றாழை சாறு ஒரு அற்புதமான மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்.

இது உங்கள் மாதவிடாயை சீராக்கவும், அதிக எடையை குறைக்கவும் ஒரு சிறந்த தீர்வாகும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் குடல் அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

கற்றாழை உங்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை சரிசெய்யவும், உங்கள் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. ஆனால் மாதவிடாய் காலத்தில் கற்றாழையை பயன்படுத்த வேண்டாம். இது கருப்பை சுருக்கங்களை அதிகரிக்கலாம்.

கற்றாழையை முகத்தில் பயன்படுத்துவது எப்படி? கற்றாழை பயன்கள்

8. பீட்ரூட்

பீட்ரூட்டை உட்கொள்வது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் அவற்றின் அறிகுறிகளை சமாளிக்க உதவும்.

பீட்ரூட்டில் அதிக அளவு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

9. ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்

முறையற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் ஒரு காரணமாகும். துரித உணவுகள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவது உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தலாம், இது ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும்.

உங்கள் உணவில் பச்சைக் காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள், இறைச்சி, மீன் மற்றும் முழுமையான ஊட்டச் சத்துக்களைத் தொடர்ந்து அளிக்கும் உணவுகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

10. உடற்பயிற்சி மற்றும் யோகா

என்னதான் மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவத்தை நீங்கள் பின்பற்றினாலும், எடையை கட்டுக்குள் வைத்து கொள்வது முக்கியம். அது மாதவிடாய் கோளாறு மீண்டும் வரமால் இருக்க உதவும்.

வழக்கமான உடற்பயிற்சி பல நன்மைகளைக் கொண்டுள்ளது. மேலும் மாதவிடாயை முறைப்படுத்துவது அவற்றில் ஒன்றாகும். இது உங்கள் எடையை பராமரிக்கவும், உங்கள் ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.

உங்கள் மனதையும் உடலையும் சமநிலைப்படுத்த யோகாவும் பயனளிக்கிறது. இது உங்கள் உடலையும் மனதையும் அமைதியாக வைத்திருக்கும்.

யோகா மாதவிடாய் வலி மற்றும் மாதவிடாய் தொடர்பான உணர்ச்சி அறிகுறிகளான மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.

மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

சரியான வீட்டு வைத்தியம் மூலம் ஒழுங்கற்ற மாதவிடாயை நீங்கள் சீராக்க முடியும். இருப்பினும், சில சமயங்களில் அறிகுறிகள் மிகவும் கடுமையானதாக இருந்தால், மருத்துவரை அணுகுவது அவசியம்.

பின்வரும் கடுமையான அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், கண்டிப்பாக மருத்துவரை பார்க்கவும்:

  • வருடத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதவிடாய்களை நீங்கள் தவறவிட்டீர்கள்.
  • வழக்கமான 21 நாட்களை விட அடிக்கடி மாதவிடாய் ஏற்பட்டால்.
  • உங்கள் மாதவிடாயின் போது இயற்கைக்கு மாறாக அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்பட்டால்.
  • மாதவிடாய் இரத்தப்போக்கு ஏழு நாட்களுக்கு மேல் நீடித்தால்.
  • உங்கள் மாதவிடாய் வலி அதிகமாக இருந்தால் அல்லது நீங்கள் வழக்கமாக அனுபவிப்பதை விட நீண்ட காலம் நீடித்தால்.

இதையும் படிக்க:

மாதவிடாய் சீராக என்ன செய்ய வேண்டும்? மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம் என்ன என்பது பற்றி பார்த்தோம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியங்களை சரியான அளவில் செய்தால், நிச்சயமாக உங்கள் மாதவிடாய் கோளாறுகள் சீராகும்.

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம் என்ன? மாதவிடாய் சீராக என்ன செய்ய வேண்டும்? (mathavidai kolaru neenga | mathavidai problem nattu maruthuvam tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top